சீனாவில் யூனான் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவர்களது முக்கிய உணவு சோளமும், அரிசியுமாகும். 2012ம் ஆண்டு பயங்கரமான வறட்சி அப்பகுதியை தாக்கினதினால் பயிர்கள் அனைத்தும் வாடிவிட்டன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டார்கள். மூட நம்பிக்கையுள்ள அநேக செயல்களின் மூலம் வறட்சியை நிறுத்த மக்கள் முயன்றார்கள். எதுவுமே பயனளிக்காமல் போன பொழுது அங்கு வாழ்ந்து வந்த 5 கிறிஸ்தவர்கள் அந்த மக்கள் மூதாதயருடைய ஆவிகளை வருத்தப்படுத்தினதினால்தான் வறட்சி நிலவுகிறதென்று அவர்களைக் குற்றப்படுத்த ஆரம்பித்தார்கள்.
அந்த 5 விசுவாசிகளும் கூடி ஜெபித்தார்கள். வெகு விரைவில் வானம் இருண்டு இடி சத்தம் கேட்டது. மிகவும் கடுமையான மழைபெய்ய ஆரம்பித்து, அன்று மதியமுதல் இரவு வரை பெய்தது. பயிர்கள் காப்பாற்றப்பட்டன. கிராமத்தில் அநேகர் அது தேவனால் அனுப்பப்பட்ட மழை என்று நம்பவில்லை. ஆனால் மற்றவர்கள் நம்பி தேவனைப் பற்றியும், இயேசுவைப்பற்றியம் மேலும் அறிந்து கொள்ள விரும்பினார்கள்.
1 இராஜாக்கள் 17,18 அதிகாரங்களில் இஸ்ரவேலில் ஏற்பட்ட கடுமையான வறட்சி பற்றி வாசிக்கிறோம். ஆனால் இந்த வறட்சி தேவனுடைய ஜனங்களுக்கு தேவன் கொடுத்த தண்டனையின் விளைவாக ஏற்பட்டதென்று அறிகிறோம். (17:1) இஸ்ரவேல் மக்கள் கானானியருடைய தெய்வமாகிய பாகாலால் அவர்களது பயிர்களுக்கான மழையை அருளமுடியும் என்று நம்பி பாகாலை வணங்க ஆரம்பித்தார்கள். பின்பு தேவன் அவரது தீர்க்கத்தரிசியாகிய எலியாவின் மூலம் எப்பொழுது மழையை வருஷிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது உண்மையான தேவனாகிய அவராலே மட்டும்தான் இயலும் என்று அந்த மக்களுக்குக் காண்பித்தார்.
எல்லாம் வல்ல நமது தேவன் நமது வேண்டுதல்களைக் கேட்க விரும்புகிறார். நமது விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கிறார். அவருடைய காலத்தையும், நோக்கத்தையும், நாம் ஒரு பொழுதுமே அறியாமல் போனாலும், நமது வாழ்க்கைக்கு சிறந்தது எதுவோ அதையே தேவன் நமக்குத் தருகிறார்.