உங்கள் வாழ்வைப் பாழாக்கின அல்லது குற்றப்படுத்துகிற செயலைச் செய்ததினால் உங்களது வாழ்க்கையே அழிந்துபோனதென்று எப்பொழுதாவது உணர்ந்துள்ளீர்களா? ஆனால் தூக்கத்திலிருந்து எழும்பினவுடன் அது ஒரு கனவுதான் என்று உணர்ந்துள்ளீர்களா? அது ஒரு கோரக்கனவாக இல்லாமல் உண்மையாயிருந்தால்? அந்த சூழ்நிலை உங்களுக்கோ அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கோ, உண்மையான நிகழ்ச்சியாய் இருந்திருந்தால் எப்படியாக உணர்வீர்கள்?
19ம் நூற்றாண்டில் ஜார்ஜ் மெக்டனோல்டினால் எழுதப்பட்ட த கியுரேட்ஸ் அவேக்கனிங் என்ற நாவல் சந்தித்த முரண்பாடு இது போலவே இருந்தது. அந்தக்கதை அவரே நம்பாத ஒரு கடவுளைப்பற்றி பேசி வந்ததைக் கண்டறிந்த ஒரு சபைப் போதகரைப்பற்றியது. ஒரு மனிதன் அவன் செய்த கொலையைப்பற்றிய குற்ற உணர்வினால் பீடிக்கப்பட்டு, மரண நிலையில் அவனது நினைவுகளை இழந்து கொண்டிருந்தான். அந்த மனிதனின் மரணப்படுக்கையண்டைக்கு அந்தப்போதகர் அழைக்கப்பட்டார்.
நெஞ்சையே பிளக்கக்கூடிய போராட்டம் அந்த மனிதனின் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நடந்தது. அந்தப் போராட்டத்தைப் பார்த்த போதகர் நாம் அனைவருமே காணுவதற்குத் தேவையான ஒன்றைப் பற்றிக் கண்டு கொண்டார். கெட்ட கனவிலிருந்து விழித்தெழும்பொழுது ஏற்படும் மன ஆறுதலானது, உண்மையாகவே கிடைக்க இயலாது என்று ஒரு காலத்தில் எண்ணின தேவனின் மன்னிப்புக்கு ஈடாகாது.
நமக்குத் தேவையான இரக்கத்தை எங்கே பெற இயலும்? சிலுவையில் அவரோடு கூட அறையப்பட்ட ஒரு கள்ளன் இயேசுவிடம் அவருடைய இராஜ்ஜியத்தில் அவனை நினைத்துக் கொள்ளும்படி கேட்டான் “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” என்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு பதில் கூறினார் (லூக்கா 23:43) இந்த இயேசுவிடம் நாம் இரக்கத்தைப் பெறலாம்.
விழித்தெழுவதை விடச் சிறந்தது
வாசிப்பு: லூக்கா 23: 33-43 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 17-19 & எபேசியர் 5:17-33
இன்றைக்கு நீ என்னுடனே கூடப்
பரதீசிலிருப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன். (வச.43)
தேவனுடைய இரக்கங்களால் நாம் இரட்சிக்கப்படுகிறோமே
ஒழிய, நமது தகுதியால் அல்ல
Our Daily Bread Topics:
odb