ஒரு இளம் தாயார் பெருமூச்சுடன் அவளது மூன்று வயது மகளுக்கான மதிய உணவைப் பாத்திரத்திலிருந்து சுரண்டி எடுத்துக் கொண்டிருந்தாள். அவளது சிறிய சமையல் அறையிலிருந்த மேஜையின் மேல் இருந்த காலியான பழக்கூடையைப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே “ஒரு கூடை நிறைய நமக்குப் பழங்கள் இருந்தால் பணக்காரனைப் போல உணருவேன்” என்று சத்தமிட்டுக் கூறினாள். அவளது சிறியமகள் அதைக் கேட்டாள்.
வாரங்கள் கடந்தன ஆயினும் தேவன் அச்சிறிய குடும்பத்தைப் பராமரித்து வந்தார். வறுமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த இளம் தாய் மிகவும் கவலைப்பட்டாள். பின்பு ஒரு நாள் மேஜையின் மேல் பழங்களால் நிரம்பியிருந்த கூடையைக் காண்பித்துக் கொண்டு “அம்மா, இங்கே பாருங்கள், நாம் பணக்காரர்!” என்று ஆச்சரியத்துடன் கூறிக்கொண்டே சமையலறைக்குள் குதித்துக் கொண்டே அவளது சிறிய மகள் வந்தாள். அந்த வீட்டில் வேறே எதுவும் மாறவில்லை. ஆனால் அவர்கள் ஒரு பை நிறைய ஆப்பிள் பழங்கள் வாங்கி இருந்தனர்.
இஸ்ரவேல் மக்களின் தலைவனாகிய யோசுவா மரிக்கும் முன்பு தேவன் அவர்களுக்குச் செய்த அனைத்து காரியங்களையும் பற்றி, அவர் கூறியதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டான். “நீங்கள் வனாந்திரத்தில் அநேக நாள் சஞ்சரித்தீர்கள்”. (24.7) என்று குறிப்பிட்டான். “மேலும் தேவன் நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும்… ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கக் கொடுத்தார்”. (24:13) என்று கூறினான். தேவன் அவர்களைப் பராமரித்து பாதுகாத்து வந்ததை இஸ்ரவேல் மக்களின் பின் சந்ததிக்கு ஞாபக மூட்ட யோசுவா ஒரு பெரிய கல்லை நட்டு வைத்தான் (வச.26).
இஸ்ரவேல் மக்களைப் போல பற்றாக்குறையையும், சவால்களையும் கடந்து, மேலே கூறப்பட்ட குடும்பம் இப்பொழுது ஒரு பெரிய வீட்டிலே வசிக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் விசாலமான பின்பக்கத்தில் அநேக பழ மரங்களை நட்டு வைத்திருந்தார். அம் மரங்களிலிருந்த பழங்களை அவ்வீட்டார் சந்தோஷமாக அனுபவித்து வந்தார்கள். நீங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களது சமையல் அறையில் மேஜையின் மீது ஒரு கூடை நிறைய பழங்களைக் காணலாம். தேவன் அவர்களது குடும்பத்திற்கு எவ்வளவு நல்லவராகவே இருக்கிறார் என்பதையும் அறியலாம். விசுவாசம், மகிழ்ச்சி, வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டம் இவற்றை அவர்களது மூன்று வயது மகள் எப்படியாக அவளது குடும்பம் முழுவதற்கும் பரவச் செய்தாள் என்பதையும் அப்பழக் கூடை நினைவூட்டுகிறது.
நம்மிடம் பழங்கள் உண்டு
வாசிப்பு: யோசுவா 24: 2, 8-14 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 14-16 & எபேசியர் 5:1-16
நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும்,
நீங்கள் கட்டாத பட்டணங்களையும்
உங்களுக்குக் கொடுத்தேன்
(வச. 13)
நேற்றைய தினம் தேவன் நம்மை போஷித்து நடத்தி வந்ததை நினைவுகூருவது,
இன்றைய நாளுக்கான நம்பிக்கையையும், பெலனையும் தருகிறது.
Our Daily Bread Topics:
odb