ஒரு நாள் எனது சிநேகிதி என்னை வழியில் நிறுத்தி அவளது அண்ணனுடைய ஒரு வயது குழந்தை நடப்பதற்காக எடுத்து வைத்த முதல் அடியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டாள். அவனால் நடக்க முடிகிறதென்று ஆச்சரியத்துடன் கூறினாள். அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு எங்களுடைய வார்த்தைகள் எவ்வளவு வினோதமாக இருந்திருக்குமென்று பின் நாட்களில் எண்ணிப் பார்த்தேன் உலகிலுள்ள அநேக மக்களுக்கு நடக்க இயலும் அது என்ன பெரிய காரியம்?.
குழந்தைப் பருவம் சிறப்புத் தன்மைகளை உடையதாகவுள்ளது. ஆனால் அத்தன்மைகள் வாழ்க்கையின் பின் பகுதியில் முழுமையாக மறைந்து விடுகின்றன. நாம் சிறுபிள்ளைகளை நடத்தும் விதத்தைப் பற்றி நான் சிந்தித்தபொழுது தேவனுக்கும் நமக்குமுள்ள உறவை விளக்க, தேவன் சிறுபிள்ளைகளை வைத்து சித்தரித்தது சிறந்தது என நினைத்தேன். எல்லா உரிமைகளையும், எல்லா சலுகைகளையுமுடைய தேவனுடைய சுதந்திரவாளிகள் என்று நம்மைப் பற்றி புதிய ஏற்பாடு கூறுகிறது. (ரோமர் 8: 16-17) தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு நம்மை தேவனுடைய குமாராகவும், குமாரத்திகளாகவும் சுவிகாரப்புத்திரராக்கவும் வந்தார் என்று கூறப்படுகிறது.
ஒரு குழந்தையின் பெற்றோர் அதனுடைய முதல் அடியை எப்படியாக ஆர்வத்துடன் கவனிக்கிறார்களோ அதுபோல தேவனும் எனது ஆவிக்கேற்ற நடக்கையில் தள்ளாடி, தள்ளாடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனிக்கிறார் என்று நான் கற்பனை பண்ணுகிறேன்.
இந்தப் பிரபஞ்சத்தின் இரகசியம் இறுதியில் வெளிப்படுத்தப்படும்பொழுது, சிறு பிள்ளைகள் வளருவதை கூர்ந்து கவனிப்பதின் அடிப்படை நோக்கம் நமக்கு வெளிப்படை. ஒருவேளை நம்மீது தேவனுக்குள்ள மாறாத அன்பை நாம் புரிந்து கொள்ள அந்த சிறப்பான நேரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். அவருடைய பூரணமான அன்பிற்குமுன் பூமியில் நமக்கு கிடைக்கும் இந்த அனுபவம் அரைகுறை அனுபவமாகவே உள்ளது.