யேசு கிறிஸ்து, தம்முடைய பிறப்பு, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாய் இந்த பூமிக்கு கொண்டுவந்த சுகத்தையும் ஒப்புரவாகுதலையும் குறித்து நான் சிந்தித்தேன். எங்கள் திருச்சபையில் ஆராதனை, திருமணம் மற்றும் நீதி போன்ற மையக் கருத்துக்களை அறிந்துகொள்ளும் வேத பாட வகுப்பு ஒழுங்குசெய்யப்பட்டது. அதன் கடைசி வகுப்பில், உலகத்தில் இருக்கும் அநீதியை அகற்றுவதற்க்கு, முதலில் தங்கள் இருதயத்தில் இருக்கும் அநீதியை அகற்ற வேண்டும் என்று போதிக்கப்பட்டது.

அந்தக் காலை ஆராதனைக்குப் பின், திருச்சபையின் முன் வளாகத்தில் என்னை ஒரு நபர் சந்தித்து, தம்மை மன்னிக்குமாறு கேட்டார். உடனே, அவருடனான என்னுடைய உறவையும், அவருக்கு விரோதமாய் நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ என்று சமீபத்தில் அவரிடம் நான் பேசிய வார்த்தைகளை சிந்திக்கத் துவங்கினேன். என் சிந்தையில் எதுவும் பிடிபடவில்லை. “நான் என்ன செய்தேன்?” என்று அவரிடத்தில் கேட்டேன். அதற்கு நான் அவருக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். ஆனால் அவருடைய இருதயத்தில் சில கசப்புகள் இருந்தன.

“நீங்கள் திருச்சபையின் மூத்த போதகர் தேர்தலில் நின்றபோது, நான் உங்களுக்கு வாக்களிக்கவில்லை” என்றார்.

அது ஒன்றும் பெரிய தவறுபோல் எனக்கு தோன்றவில்லை. “எனக்கு நிறைய பேர் வாக்களிக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.” ஊழியப்பொறுப்புகளுக்கான தேர்தலில் நிற்கும் நபர்கள் யாரும் 100 சதவிகிதம் வாக்கைப் பெறுவதில்லை. அதுவே ஊழிய பொறுப்புகளுக்கு ஏற்படுத்தப்படும் தேர்தலின் அவலம். ஆனால் அதற்கு பின்பு அவர் சொன்ன காரியம் என்னை நிலைகுலையச் செய்தது.

“நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். வேறு ஜாதி, வேறு இனத்திலிருக்கும் மக்கள் மீதான என்னுடைய கடந்தகால பாரபட்சத்தினாலேயே நான் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நீர் என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை.” அவர் கண்களில் கண்ணீர் மல்க, “என்னை தயவாய் மன்னிப்பீர்களா?” என்று கேட்டுக்கொண்டார்.

அவருடைய வேண்டுகோளின் முக்கியத்துவத்தை உணராதவனாய், அது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று மட்டும் சொன்னேன். அவர் என்னுடைய தோள்களை இறுகப்பற்றி, என்னுடைய கண்களைப் பார்த்து, “கேளுங்கள், நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் என்னை மன்னித்தே ஆகவேண்டும். ஏனென்றால், என்னுடைய இந்த பாரபட்ச சிந்தை என்னுடைய மகனை பாதிக்கக்கூடாது. நான் தவறுசெய்துவிட்டேன். கடந்த ஆண்டில் , உங்களுடைய செய்தியின் மூலம் தேவன் என்னுடைய வாழ்க்கையை மாற்றினார் என்று அறிக்கையிட்டார்.

“நீங்கள் என்னை மன்னித்தே ஆகவேண்டும். ஏனென்றால்,
என்னுடைய இந்த பாரபட்ச சிந்தை என்னுடைய மகனை பாதிக்கக்கூடாது.”

நான் அவரை அன்று மனப்பூர்வமாய் மன்னித்து, அவரைக் கட்டியணைத்து, ஒருவரின் தோள் மீது ஒருவர் சாய்ந்து கண்கலங்கினோம். வேத பாட வகுப்பு முடிவடைந்த பின் அடுத்த வாரத்தில், அது எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருந்தது என்று கலந்து ஆலோசித்தோம். என்னிடம் மன்னிப்புக் கோரிய அந்த நபர், எழுந்து நின்று, என்னிடத்தில் பகிர்ந்துகொண்ட காரியங்களை பகிரங்கமாய் திருச்சபையில் சாட்சியளித்தார். சபையார் யாவரும் எழுந்து நின்று, கைகளைத் தட்டி ஆரவாரமிட்டு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

இயேசு தடைச்சுவர்களைத் தகர்த்து, அவருடைய சரீரத்தின் அவயவங்களாய் நம்மை ஒன்றாக்குகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்களையும் புறஜாதிகளையும் பல நூற்றாண்டுகளாய் பிரித்த தடுப்புச் சுவரை, கன்னியின் வயிற்றில் பிறந்து, பரிசுத்தமாய் வாழ்ந்து, மீட்பைக் கொடுக்கும் மரணத்தை தேர்வுசெய்த அதே இயேசு தகர்த்தெறிந்தார். இந்த தடுப்புச் சுவர் என்பது மாம்ச பிரகாரமான ஒரு சுவர் அன்று; மாறாக, ஆவிக்குரிய தடுப்புச் சுவர் ஆகும். இருதயத்தின் கசப்பும், மார்க்க ரீதியான கலகச் சிந்தையுமே யூதர்களையும் புறஜாதிகளையும் இரண்டாய்ப் பிரித்தது.

ஆனால் இயேசுவின் மாம்ச அவதாரம், பாவமில்லாத வாழ்க்கை, பிட்கப்பட்ட சரீரம், மீட்பைக் கொண்டுவரும் மரணம், ஆகியவற்றின் மூலம் அந்த சுவரைத் தகர்த்து, யூதர்கள் மற்றும் புறஜாதிகள் தங்களுக்குள்ளும் தேவனோடும் ஒப்புரவாகும்படி செய்தார் (கொலோசெயர் 3:11; கலாத்தியர் 3:28). இயேசு என்னும் திருச்சபையின் ஒரே சரீரத்தின் அவயவங்களாய் அவர்கள் தேவனோடும், ஒருவரோடொருவரும் சமாதானத்தை அனுபவித்தனர்.

தேவனோடும் சகமனிதர்களோடும் நமக்கிருந்த பகையை தணிப்பதற்காகவே இயேசு இந்த உலகிற்கு வந்தார். அவருடைய பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, பழைய பகைவர்களை தேவன் புதிய சிருஷ்டியாய் மாற்றியிருக்கிறார் (யோவான் 17:20-21). குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு கூட்ட மக்களுக்கோ சமாதானத்தைக் கொண்டுவருவது அவருடைய நோக்கமல்ல; மாறாக, கிறிஸ்துவே நம்முடைய சமாதானமாய் மாறுகிறார். வரப்போகிற சமாதானப் பிரபுவை குறித்து ஏசாயா முன்னறிவிக்கிறார் (ஏசாயா 9:6). கிறிஸ்துவின் மீதான விசுவாசமே தேவனுக்கும் நமக்கும் உள்ள சமாதான நல்லுறவிற்கு அடித்தளமாய் அமைகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து, இப்போதும் நம்மை தேவனுடைய சரீரத்தின் அவயவங்களாய் ஒருங்கிணைக்க தடையாயிருக்கும் சுவரை ராஜாவாகிய இயேசு தகர்க்க போதுமானவராய் இருக்கிறார். யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் இடையேயிருந்த தடுப்புச் சுவரை இயேசு அகற்றியதுபோல, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டிலும், அதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு மாலை நேரத்தில், சீனத்து மாணவர்கள் சிலர், தைவான் தேசத்து மாணவர்கள் சிலர், மற்றும் ஹாங்காங் தேசத்து மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு பெரிய விருந்து அறையில் ஆராதனை செய்ய நேர்ந்தது. அவர்களுக்குள் பெரிய அளவில் பிரிவினைகள் காணப்பட்டன. அவர்களின் பூர்வீக பாரம்பரிய வரலாற்றை மையமாய் வைத்து அவர்களுக்குள் பிரிவிணைகள் காணப்பட்டன. மேலும் தன்னுடைய இன மக்களோடு இணைந்து ஆராதிப்பதே நல்லது என்ற நம்பிக்கையும் அவர்களுக்குள் இருந்தது.

சீனத்து மாணவர்கள் ஒன்றாக இணைந்து ஜெபித்தபோது, மற்ற தேசத்து மாணவர்களையும் ஜெபத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று தேவன் அவர்களுடைய இருதயத்தில் ஏவினார். தைவானிய மாணவர்களும் ஹாங்காங் மாணவர்களும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குள் இருந்த பிரிவினைச் சுவரை தகர்த்தெறிந்து, சீனத்து மாணவர்களுடன் இணைந்து மகிமையான ஒர் ஆராதனையில் பங்கேற்றனர். அந்தத் தருணத்தில், மாம்ச ரீதியாய் தடையாயிருந்த பிரிவினை என்னும் தடைச் சுவரை தகர்த்தெறிந்து, ஆவியில் ஒருமனப்பட்டு ஆராதனை செய்தனர். இயேசு இன்று நமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் சுவர்களை தகர்த்தெறிந்து நமக்கும் சமாதானத்தை கொடுப்பதற்கு போதுமானவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்து நமக்கு சமாதானத்தைக் கொடுப்பதற்காகவே பூமியில் வந்தார் என்னும் சத்தியத்தை கிறிஸ்துமஸ் அறிவிக்கிறது. அந்தச் சமாதானம் நம்முடைய இருதயத்தில் கிரியை செய்து, தேவனோடும் மனிதனோடும் உள்ள உறவை சரிசெய்கிறது. நம்முடைய கலாச்சார பாகுபாடுகள், பகைகள், மற்றும் விரோதங்கள் அவரில் ஒப்புரவாக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ்

என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை பார்ப்பதை நான் அதிகம் விரும்புவேன். அவர்களின் அலங்கரிப்புகளுக்காகவும் விமரிசையான கொண்டாட்டத்திற்காகவும் அல்ல; மாறாக, அவர்கள் தங்களுடைய கிறிஸ்துமஸை கடற்கரையில் கொண்டாடுவது வழக்கம். ஏனென்றால் அங்கே கிறிஸ்துமஸ் கோடை காலத்தில் வரும். பூமியின் வடதிசையில் இருக்கும் மக்கள், தென் திசையில் இருக்கும் மக்கள் தங்களுடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கோடைக் காலத்தில் கொண்டாடுகின்றனர் என்பதை முற்றிலும் மறந்துவிட்டோம். ஆனால் கிறிஸ்துமஸ் நாளில் நான் பார்க்க விரும்பியது இதுவன்று.

சமபந்தி

வரவிருக்கிற விடுமுறை நாட்களைக் குறித்து ஸ்காட் சற்று கவலையுற்றிருந்தார். மீந்திருக்கிற சில பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, தனியே உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிக்கவேண்டும் என்று அறிந்தார். தன்னுடைய தனிமையை போக்க எண்ணிய ஸ்காட், தன்னைப் போன்றே தனிமையாய் இருப்பவர்கள் தன்னோடு விருந்தில் பங்கேற்குமாறு செய்தித்தாளில் விளம்பரப்படுத்தினார். அவருடைய அந்த அழைப்பை ஏற்று, பன்னிரண்டு பேருக்கு குறையாமல் வந்திருந்தனர். அது 1985ஆம் ஆண்டு. 

உலகத்திற்கு மகிழ்ச்சி

“ஜாய் டூ த வேல்ர்ட்…” (Joy to the world) என்ற ஆங்கில பாடலின் நடு வரியை பாடிய மெய்ஃபேங் அப்படியே தன் பாடலை நிறுத்தினாள். அவளுடைய சிந்தையில் அவளுடைய அம்மாவின் நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அவளுடைய அம்மாவும் அவளுடன் சேர்ந்து இந்த பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் தற்போது உயிரோடு இல்லை. ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். மெய்ஃபேங்கைப் பொருத்தவரையில், கிறிஸ்துமஸ் என்பது எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை. கவலையோடும் வேதனையோடும் இருக்கும்போது கிறிஸ்துமஸை கொண்டாடுவது கடினம்.

கிறிஸ்துமஸில் கனவு காணுதல்

இர்விங் பெர்லின் என்பவருக்கு கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி அல்ல, துக்கம். “ஒயிட் கிறிஸ்துமஸ்” என்ற பாடலை இயற்றிய இவர், 1928ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தன்னுடைய பிள்ளையை பறிகொடுத்தார். அவருடைய ஏக்கம் நிறைந்த இந்தப் பாடல், கடந்த கால விடுமுறை நாட்களின் மகிழ்ச்சியை திரும்பத் தேடும் பாடலாய் இயற்றப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது வீடு திரும்பமுடியாத இராணுவத்தினரிடையே இப்பாடல் மிகவும் பிரபலமடைந்திருந்தது.

நமக்கு புத்துணர்வூட்டும் பரிசு

கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் சில தினங்களே உண்டு. என்னுடைய மனைவி கேரி, சூப்பர் மார்க்கெட்டின் பணம் செலுத்தும் வரிசையில் நின்றிருந்தாள். அவளுக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த மூதாட்டி ஒருவர் அவருடைய கூடையில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பொறுமையற்றிருந்த கேரி, பின்பு கரிசனையோடு அணுக நேர்ந்தது. ஏனென்றால் அந்த மூதாட்டியிடம் பொருட்களை வாங்குவதற்கான போதிய பணம் இல்லை என்பதை நிதானித்துக் கொண்டாள்.

கிறிஸ்துமஸின் மெய்யான பரிசு

“நான் சில வேளைகளில் தனிமையாய் உணர்கிறேன். அந்த தனிமையிலிருந்து வெளிவரவேண்டியது மற்றவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அந்த தனிமை எனக்குக் கற்பிக்கிறது.” இதைச் சொன்னது ஆஸ்டீரியா. இவர், போதை பழக்கத்திற்கு அடிமையானோர் அதிகம் வசிக்கும் எல் கேம்பமெண்டோ என்ற நகரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அனுசரிக்கும் ஃபெயித் பேஸ்ட் கம்யூனிட்டி குழுமத்தின் செயலாளர்.

பலதரப்பட்ட-குழுவின்-கேப்

ஒரு குழந்தையாய் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களை அனுசரிப்பது என்பது எனக்கு மிகவும் பிரியமான ஒன்று. காலையில் பரிசுப்பொருட்கள் எங்கள் வீட்டில் குவிந்திருக்கும்; இரவில் விருந்து ஏற்பாடுகள் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும்; திருச்சபையில் மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெறும். எங்கள் வீட்டில் இரவு விருந்துக்கு யார் வரப்போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு நான் ஆவலோடு காத்திருப்பேன். என்னுடைய பெற்றோர்கள், பொதுவாக தனிமையில் இருப்பவர்கள், மற்றும் விருந்துண்ண வாய்ப்பில்லாதவர்களை எங்கள் வீட்டின் விருந்துக்கு அழைப்பதுண்டு.

மரியாளுக்குத் தெரியும்

நான்கு வயதே நிரம்பிய கயிட்லின் அந்த அறையில் இருந்த எதையும் பெரிதாய் கவனிக்கவில்லை. அதில் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கரிப்புகளையும் பரிசுப்பொருட்களையும் அவள் பொருட்படுத்தவில்லை. அவள் நேராக, கிறிஸ்து பிறப்பின் மாதிரியாய் செய்யப்பட்டிருந்த குடிலுக்கு சென்று, அதிலிருக்கும் வேதாகம கதாபாத்திர உருவங்களை எடுத்து விளையாட ஆரம்பித்துவிட்டாள். அதில் இடம்பெற்றிருந்த மரியாள், யோசேப்பு, மற்றும் குழந்தையை எடுத்து விளையாடிக்கொண்டே, “மரியாளே, உனக்கு தெரியுமா?” (Mary, did you know?) என்ற பிரபல ஆங்கில பாடலை, மற்றவர்கள் பாடியதைக் கேட்டு முணு முணுத்தது என் கவனத்தை ஈர்த்தது.

கண்ணீரினூடாய்

என் குடும்பத்தை விட்டு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் நான் கிறிஸ்துமஸை கொண்டாட நேரிட்டது. நாங்கள் கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகளை பிரித்துக்கொண்டிருக்கிறோம் என்று என்னுடைய கணவர் என்னிடத்தில் சொன்னமாத்திரத்தில், நான் தனிமையாகவும் சோர்வாகவும் உணர்ந்தேன். என் இருதயம் வியாகூலப்படும்போது என்னால் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்?

வாரும் இம்மானுவேலே

பொதுவாக கிறிஸ்துமஸ் பாடல்களில், முதல் அல்லது இரண்டாம் சரணங்களே நமக்கு பிடித்தமானதாக இருக்கும். ஆனால் ஒரு கிறிஸ்துமஸ் பாடலின் ஏழாவது சரணம், நம்முடைய காலகட்டத்திற்கு நேர்த்தியாய் பொருந்தக்கூடியதாய் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, “ஓ, வாரும், ஓ வாரும் இம்மானுவேலே,” என்ற பாடலின் சரணம் இப்படியாக இடம்பெறுகிறது:

banner image

கிறிஸ்துமஸ் நாளிலே தனியாகவோ அல்லது குடும்பம் மற்றும் பிள்ளைகளுடனோ இயேசுவின் பிறப்பை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். சுவாரஸ்யமான பேச்சுகள், சுவையான உணவுகள் என்று பாத்திரங்களை கழுவும்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். லூக்கா சுவிசேஷத்தில் இடம்பெற்றுள்ள இயேசுவின் பிறப்பு சம்பவத்தை படிக்கும்போது, இயேசு என்னும் ஆச்சரியமான பரிசைக் கண்டு வியப்படைகிறோம். கிறிஸ்துவை அறிவதற்கு முன்பாக அந்நியர்களாய் கருதப்பட்டோம் ஆனால், தற்போது சகோதர சகோதரிகளாய் மாறியிருக்கிறோம்.

இயேசு அந்நியர்களை எப்போதும் வரவேற்கிறார். அவருடைய பிறப்பின்போது கூட மேய்ப்பர்கள் வந்து, குழந்தையின் பிறப்பைக் கொண்டாட தேவன் அனுமதிக்கிறார்: “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்!” (லூக்கா 2:11). மேய்ப்பர்கள் ஆர்வத்துடன் பெத்லகேமுக்கு வருகிறார்கள். குழந்தையைப் பார்த்த பின்பு அவர்கள் அந்த நற்செய்தியை எங்கும் பிரசித்தப்படுத்தினார்கள். “மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (வச. 18).

மேசியா, குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து, அவரைப் பின்பற்றுகிறவர்களின் பாவங்களுக்கான நேர்த்தியான விலைக்கிரயமாய் சிலுவையில் தம்மை மரிக்க ஒப்புக்கொடுத்தார். குமாரனும் தேவனுமாகிய இயேசு, தம்மைத் தாழ்த்தி ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்து, நமக்காய் தம் ஜீவனை தியாகமாக்கியிருக்கிறார். இயேசுவைக் கண்ட மாத்திரத்தில் மேய்ப்பர்கள் விழுந்து பணிந்து அவரை வணங்கினதுபோல (வச. 20), நாமும் அவரைப் பணிந்துகொள்ளும்போது, அவருடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாய் மாற்றப்படுகிறோம். இயேசு என்னும் மெய்யான ஜீவ ஒளியை பறைசாற்றும் உலகளாவிய குழுவின் அங்கத்தினர்களாய் நாம் மாற்றப்பட்டு, அவரால் பயன்படுத்தப்படுவோம்.
இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நீங்கள் ஒதுக்கப்பட்டவர்களாய் உங்களைக் கருதினால், இயேசுவை விசுவாசிக்கும்போது, “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி” (சங்கீதம் 68:6) ஆசீர்வதிக்கப் போதுமானவர் என்பதை அறியுங்கள்.