banner image

வேதாகம தைரியம் என்ற கருத்து வேதாகமத்தில் காணப்படும் போதனைகள் மற்றும் கதைகளில் வேரூன்றியுள்ளது. அது துன்பம் அல்லது ஆபத்தை எதிர்கொள்ளும் வீரம், பெலன் மற்றும் அச்சமின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அது தனிநபர்கள் தடைகளை கடக்கவும் தேவ நோக்கத்தை நிறைவேற்றவும் உதவும் ஒரு நல்லொழுக்கம் ஆக பார்க்கப்படுகிறது. தாவீது கோலியாத்தை தோற்கடித்தது, தன் மக்களை காப்பாற்ற இராஜாவை அணுகுவதில் எஸ்தரின் தைரியம் மற்றும் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் தம் ஊழியத்தில் இயேசுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்ற வேதாகம தைரியம், வேதாகமத்தில் உள்ள பல கதைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. தைரியம் தேவ விசுவாசத்தில் இருந்து வருகிறது என்றும் தேவனை நம்புபவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள பலப்படுத்தப்பட்டு தயாராக இருப்பார்கள் என்றும் வேதாகமம் போதிக்கிறது.

தைரியத்துக்கான சோதனை

என் மகள் ஆழ்ந்த வலியை அனுபவித்த சில நொடிகளுக்கு பிறகு நான் சமையலறைக்கு சென்றேன். அவள் சுண்டுவிரல் கதவிடுக்கில் மாட்டிக்கொண்டது. நான் பார்த்தபோது அவள் தன் ஒரு கையை கதவிடுக்கில் வைத்து மறு கையால் கதவை மூட முயன்றாள். என்ன செய்கிறாள் என்று கேட்டபோது ,”நான் என் தைரியத்தை சோதிக்கிறேன்” என்றாள்.  மேலும் வாசிக்க …

தைரியம் விமர்சனத்துக்கு உரியது

நம்பிக்கையும் சாத்தியங்களும் உடைய இனிய பருவத்தில் நாம் இருக்கிறோம். அந்த ஆண்டு எத்தனை கடினமாக இருப்பினும் அநேகர், சிறந்த மற்றும் பிரகாசமான புத்தாண்டை எதிர்பார்க்கிறோம்.போன ஆண்டின் இறுதியில் என் வேலையோடு கூட மகப்பேறு விடுப்பில் சென்ற சக ஊழியரின் பொறுப்புக்களையும் சமாளிக்க வேண்டியிருந்தன.  மேலும் வாசிக்க …

அசாதாரண தைரியம்

1478 ல் லொரென்சோ .டி.மெடிசி இத்தாலியின் புளோரன்ஸின் ஆட்சியாளர் தம் உயிருக்கு ஏற்பட்ட தாக்குதலிலிருந்து தப்பித்தார். அவர் நாட்டினர் பழிவாங்க போரிட்டனர். சூழ்நிலை மோசமானதும் கொடூர அரசன் நேபிள்ஸ் ஐ சார்ந்த பெர்னான்டோ I, லொரென்சோவின் விரோதியானார். ஆனால் லொரென்சோவின் தைரியமான செயல் அனைத்தையும் மாற்றியது.   மேலும் வாசிக்க …

 

தைரியத்திற்கான அழைப்பு

சாலொமோனின் நடுங்குகின்ற இருதயத்தை அறிந்த தாவீது தம் மகனுக்கு வல்லமையான வார்த்தைகளை வழங்கினார்: “பலம் கொண்டு தைரியமாயி ருந்து …நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடு இருப்பார்”.  மேலும் வாசிக்க …

 

தைரியத்தை தரித்துக் கொள்ளுங்கள்

எலியா மிரட்டலுக்குப் பணியவில்லை. இஸ்ரவேலின் ராஜா 50 சேவகர்களை அனுப்பி கைது செய்யச் சொன்னார். தீர்க்கதரிசிக்கு தேவன் தம் கூட இருப்பார் என்பது தெரியும். அவர் அக்கினியை வானத்திலிருந்து இறக்கிவிட அனைவரையும் அக்கினி பட்சித்தது. ராஜா மறுபடி சேவகர்களை அனுப்ப எலியா மறுபடி அதையே செய்தார். ராஜா மறுபடி மூன்றாந்தரம் சேவகர்களை அனுப்பினார்.    மேலும் வாசிக்க …

 

தைரியத்துடன் நில்லுங்கள்

மோசே இஸ்ரவேலரை பயத்தை எதிர்த்தும் தேவனை உண்மையாய் பின்பற்றவும் ஊக்கப்படுத்தினார். மோசே எடுத்துக் கொள்ளப்படுவார் என்று அறிந்த மக்கள் பயப்பட்டபோது மோசே தளராத வார்த்தைகளைச் சொன்னார்: “பலங்கொண்டு திடமனதாயிருங்கள். பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்.”   மேலும் வாசிக்க …

 

தேவனுடைய உறுதி

நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்? அது எதுவாக இருந்தாலும் நீங்கள் கோழை இல்லை- நீங்கள் அதை எதிர்கொள்ள தீர்மானித்து உள்ளீர்கள், இருப்பினும் இன்னமும் உங்களுக்கு பய உணர்வு இருக்கலாம். யாரும் உதவுவதற்கு இல்லை என்ற நிலையில் உங்களுக்குள்ளே “ஆனால் ‘கர்த்தர் எனக்கு சகாயர்’ இந்தக் கணத்தில் ,என் தற்போதைய சூழ் நிலையிலும் “என்று சொல்லிக் கொள்ளுங்கள்.  மேலும் வாசிக்க …