banner image

நீ பலங்கொண்டு தைரியமாயிரு. 1 நாளாகமம் 28:20

லண்டனின் பார்லிமென்ட் ஸ்கொயரில் காட்சியில் உள்ள ஆண் சிலைகள் (நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி மற்றும் பலர்) நடுவே ஒரு பெண்ணின் தனிமையான ஒரு சிலையும் உண்டு. அந்த தனிமையான பெண், பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய மில்லி சென்ட் ஃபாசெட் ஆவார். அவர் வெண்கலத்தில் அழியாமல் இருக்கிறார்- சக வாக்கு உரிமையாளருக்கு அஞ்சலி செலுத்திய போது பிடித்து இருந்த பதாகையில் காட்சியளித்த வார்த்தைகள்: “தைரியம் எல்லா இடங்களிலும் தைரியமாக இருக்க அழைக்கிறது”. ஃபாசெட், ஒரு நபரின் தைரியம் மற்றவர்களை தைரியப் படுத்தும்- கோழைகளை செய்கைக்கு அழைக்கிறது என்று வலியுறுத்துகிறார்.

தாவீது தம் மகனான சாலொமோனுக்கு ராஜ்ய பாரத்தை அளித்தபோது அவன் தோள்களில் சுமரப்போகும் பொறுப்புகளை விளக்கினார். தான் எதிர்கொண்ட பாரத்தால் சாலொமோன் நடுங்கிட வாய்ப்புண்டு: இஸ்ரவேலரை தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்கவும், தேவன் கொடுத்த தேசத்தை காக்கவும், மற்றும் ஆலயத்தை கட்டவும் வேண்டி இருந்தன (1 நாளாகமம் 28:8-10).

சாலொமோனின் நடுங்குகின்ற இருதயத்தை அறிந்த தாவீது தம் மகனுக்கு வல்லமையான வார்த்தைகளை வழங்கினார்: “பலம் கொண்டு தைரியமாயிருந்து …நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடு இருப்பார்” (வசனம் 20). உண்மையான தைரியம் சாலொமோனின் சுய திறன் அல்லது நம்பிக்கையால் வராது. ஆனால் தேவனின் வசனத்தையும் அவர் பலத்தையும் நம்பும்போது வரும். சாலொமோனுக்கு தேவையான தைரியத்தை தேவன் வழங்கினார்.

நாம் துன்பத்தை எதிர்கொள்ளும்போது, நாம் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள அல்லது வீரத்தைப் பற்றி நமக்குள் பேசுகிறோம். எப்படி இருப்பினும் தேவன் மட்டுமே நம் விசுவாசத்தை புதுப்பிக்க முடியும். அவர் நம்மோடு இருப்பார். அவர் பிரசன்னமே நாம் தைரியமாய் இருக்க நம்மை அழைக்கிறது.

சிந்தனை

எது உங்கள் இருதயத்தை பயத்தில் நடுங்க வைத்தது? தைரியத்தை நோக்கி நகர தேவனின் பிரசன்னத்தையும் வல்லமையையும் நீங்கள் எவ்வாறு தேடுவீர்கள்?

தேவனே நான் அடிக்கடி பயப்படுகிறேன். அப்படி இருக்கும்போது நான் என் சுய புத்திசாலித்தனம் அல்லது தைரியத்தை நம்புகிறேன் -அது போதுமானது அன்று. உங்கள் தைரியத்தை அருளுங்கள்.