banner image

என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக் கொண்டு போம்; ராஜாவுக்கு அர்த்தத்தை தெரிவிப்பேன். தானியேல் 2:24.

1478 ல் லொரென்சோ டி. மெடிசி இத்தாலியின் புளோரன்ஸின் ஆட்சியாளர் தம் உயிருக்கு ஏற்பட்ட தாக்குதலிலிருந்து தப்பித்தார். அவர் நாட்டினர் பழிவாங்க போரிட்டனர். சூழ்நிலை மோசமானதும் கொடூர அரசன் நேபிள்ஸ் ஐ சார்ந்த பெர்னான்டோ I, லொரென்சோவின் விரோதியானார். ஆனால் லொரென்சோவின் தைரியமான செயல் அனைத்தையும் மாற்றியது. அவர் அரசனை நிராயுதபாணியாக தன்னந்தனியாக சந்தித்தார். இந்த வீரம், அவருடைய வசீகரம் மற்றும் புத்திசாலித்தனம் பெர்ரான்டேவின் போற்றுதலை ஜெயித்து, போரை முடித்தார்.

தானியேலும் ஒரு ராஜாவின் மனமாற்றத்திற்கு உதவினான். ராஜா நேபுகாத்நேச்சார் கண்ட கனவின் விவரத்தையோ அல்லது அர்த்தத்தையோ சொல்ல பாபிலோனில் எவரும் இல்லை. இதனால் ராஜா மகா கோபமும் உக்கிரமுங் கொண்டு எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டார் – தானியேலும் அவன் தோழர்களும் உள்பட. ஆனால் தன்னை சாகடிக்க சொன்ன ராஜாவை சந்திக்க அனுமதி கேட்டான் (தானியேல் 2 :24).

நேபுகாத்நேச்சார் முன்பு, தானியேல் சொப்பனத்தின் மறைபொருளை வெளிப்படுத்த தேவனால் முடியும் என்று தேவனுக்கு கனத்தை அளித்தார் (வசனம் 28). தீர்க்கதரிசி விளக்கிச் சொன்னதும் நெபுகாத்நேச்சார் “தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும்” என்று தேவனை கனப்படுத்தினார் (வசனம் 47). தானியேலின் அசாதாரண தைரியம், தேவனுடைய விசுவாசத்தில் பிறந்தது அவனையும், தோழர்களையும், மற்ற ஞானிகளையும் மரணத்தில் இருந்து காப்பாற்றியது.

நம் வாழ்வில் முக்கியமான தகவல்களை பரிமாற வீரமும் தைரியமும் தேவைப்படுகின்றன. தேவன் வழிகாட்டி நமக்கு வார்த்தைகளையும், ஞானத்தையும் அருளி என்ன பேசவேண்டும் என்பதையும் சிறப்பாக சொல்லக்கூடிய திறமையையும் அளிக்கட்டும்.

சிந்தனை

உங்கள் வாழ்வில் ஒருவரின் வீரம் எப்படி வித்தியாசத்தை ஏற்படுத்தியது?

அன்பான இயேசுவே, இந்த உலகில் நீர் வாழ்ந்தபோது காண்பித்த தைரியத்துக்காக நன்றி. நான் பதற்ற நிலைமையை சந்திக்கும்போது, உம்முடைய ஞானத்தினாலும் வல்லமையாலும் என்னை நிரப்பும்.