banner image

பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே கலங்காதே நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்  (வச. 9). (யோசுவா 1:2-9)

நம்பிக்கையும் சாத்தியங்களும் உடைய இனிய பருவத்தில் நாம் இருக்கிறோம். அந்த ஆண்டு எத்தனை கடினமாக இருப்பினும் அநேகர், சிறந்த மற்றும் பிரகாசமான புத்தாண்டை எதிர்பார்க்கிறோம். போன ஆண்டின் இறுதியில் என் வேலையோடு கூட மகப்பேறு விடுப்பில் சென்ற சக ஊழியரின் பொறுப்புக்களையும் சமாளிக்க வேண்டியிருந்தன.

மோசேயின் இறப்புக்குப்பின் யோசுவா எதிர் கொள்ளும் பெரிய மற்றும் அச்சுறுத்தும் பொறுப்பு- வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தும் பொறுப்பு இருந்தன. (யோசுவா 1:1-2). தேவன் மோசேயை ஒரு பிடிவாதமான பாரோனுக்கு முன்பு அதிசயங்களை செய்ய வைத்தார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த மக்களை 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் வழிநடத்த செய்தார். பாலும் தேனும் ஓடும் தேசத்தை அடையும் வாக்களிக்கப்பட்ட நம்பிக்கையை மக்கள் பகிர்ந்தனர். மோசேயின் மரபை பின்பற்றுவது கடினம். தேவன் யோசுவாவின் பயத்தை போக்க மீண்டும் உரையாற்றினார். “பலங்கொண்டு திடமனதாயிரு” (வசனம் 6-7,9).

யோசுவா இஸ்ரவேல் தேசத்தின் தலைவனாய் வெற்றிகரமாய் இருப்பது என்பது தேவனுக்கு கீழ்ப்படிதலை சார்ந்துள்ளது (வசனம் 7). நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்து இரவும் பகலும் அதைத் தியானித்து அதிலுள்ள அனைத்துக்கும் கீழ்ப்படிய கவனமாய் இருப்பது முக்கியம் என்று தேவன் வெளிப்படுத்தினார். தேவனையும் அவர் வல்லமையையும் சார்ந்து கொள்வதால் மட்டுமே யோசுவா வெற்றியை அடைய முடியும் (வசனம் 8).

இந்த ஆண்டு பேறுகால விடுப்பு எடுத்தவரின் பொறுப்புகளை கூடுதலாக சுமந்தாலும் நான் வளர்த்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தால் புதிய அனுபவங்கள் பெற்று வளர்ந்தேன். நான் அவர் வார்த்தைகளை வாசித்து அதை பின்பற்றுவதால் தேவன் விசுவாசத்தை நிரூபித்தார்.

இந்த ஆண்டு வேதத்தை வாசிக்கவும் நேரத்தை செலவிடுவோம். தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்போம் பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (வசனம் 9).

சிந்தனை

வாசிக்க ஏசாயா 41 :10 தேவன் உன்னுடனே இருப்பதால், நீ பயப்படத் தேவையில்லை என்று நினைவூட்டினார்.

புதிய ஆண்டை எதிர்பார்க்கும் நீங்கள் எதற்காவது பயப்படுகிறீர்களா? தேவன் யார் என்று புரிந்து கொள்வதிலும் நம்மை அழைத்து என்ன செய்ய சொன்னார் என்பதிலிருந்து தைரியம் எவ்வாறு பாய்கிறது?