வகை  |  odb

விட்டுவிடுங்கள்

கீத் பணிபுரிந்த புத்தகக் கடையின் உரிமையாளர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தார். ஆனால் அவரது உதவியாளரான கீத் ஏற்கனவே பீதியில் இருந்தார். புத்தகக் கடை சீராக இயங்கினாலும், அதை தன்னால் நேர்த்தியாய் மேற்பார்வையிட முடியாது என்று கீத் சற்று பதற்றத்திலிருந்தார். ஆகையால் வெறித்தனமாய் தன்னால் முடிந்த அனைத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட துவங்கினார். 

“போதும் நிறுத்து” என்று அவரது முதலாளி ஒரு வீடியோ அழைப்பின் மூலம் அவரிடம் கூறினார். “நான் தினமும் உனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வேலைகளை மட்டும் நீ செய்தால் போதும். கவலைப்படாதே கீத். சுமை உன் மீது இல்லை; அது என் மீது உள்ளது" என்று தெரியப்படுத்தினார். 

மற்ற நாடுகளோடு இஸ்ரவேலுக்கு கலகம் ஏற்படும்போது, தேவன் அவர்களை அமர்ந்திருக்கும்படி சொல்லுகிறார் (சங்கீதம் 46:10). அதாவது, “சுயமாய் முயற்சிசெய்வதை நிறுத்துங்கள், நான் சொல்வதைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்காக யுத்தஞ்செய்வேன்” என்று சொல்லுகிறார். எதுவும் செய்யாமல் இஸ்ரவேல் அமைதிகாக்கவில்லை; மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் தேவனை சார்;ந்துகொண்டனர். 

நாமும் அதையே செய்வதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம்பும் தேவன் சர்வத்தையும் ஆளுகிறவர் என்பதினால் அதை நம்மால் நேர்த்தியாய் செய்யமுடியும். “அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று,” “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்” (வச. 6,9). ஆகையால் அவருடைய அடைக்கலத்தையும் பெலத்தையும் நாம் நம்பலாம் (வச. 1). நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை, அது தேவனிடத்தில் இருக்கிறது.

பயமில்லை-நாள் 10

தேவதூதன் அவர்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்” என்றார். லூக்கா 2:10

வேதாகமத்தில் ஒவ்வொரு முறையும் தேவதூதன் தோன்றும்போது, அவர் சொல்லும் முதல் வார்த்தை “பயப்படாதிருங்கள்” (தானி. 10:12,19; மத். 28:5;…

பயத்திலிருந்து விடுபடுங்கள்-நாள் 9

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4

அனுமதியின்றி எனது இதயத்தினுள் பயம் ஊடுருவுகிறது. உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்றதன்மையை…

தேவ பாதுகாப்பு-நாள் 8

உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத்தாங்குகிறது. சங்கீதம் 63:7–8

பால், லிஃப்ட், ஊசிகள், காளான்கள், பிறப்புகள், தேனீக்கள், மற்றும்…

பயம் வேண்டாம்-நாள் 7

பயப்படாதிருங்கள். . .இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11

பீனட்ஸ் என்ற நகைச்சுவை தொடரில், லினஸ் அவரது நீல நிற பாதுகாப்பு போர்வைக்காகவே மிகவும் பிரபலமானவராய் அறியப்பட்டார்.…

பயத்தை மேற்கொள்ள-நாள் 6

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங்கீதம் 20:7

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின்…

பயத்தை எதிர்கொள்வது-நாள் 5

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்சூழ்நிலையின்நடுவிலும் . சங்கீதம் 56:3

ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில்…

பயத்தால் சூழப்படுவது-நாள் 4

தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள். லூக்கா 12:31

2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும்…