எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

புதிய ஆரம்பம்

சங்கீதம் 120ஐக் குறித்த தன்னுடைய நேர்த்தியான விளக்கத்தில், யூஜின் பீட்டர்சன், “நாம் சத்தியம் என்று எதை நம்பியிருந்தோமோ அது பொய் என்ற வலிமிகுந்த உணர்வைப் பெறும்போதே கிறிஸ்தவ விழிப்புணர்வு துவங்குகிறது” என்கிறார். சங்கீதம் 120, எருசலேமுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களால் பாடப்பட்ட “உன்னதப்பாடல்” வரிசையில் (120-134) முதலாவதாய் இடம்பெற்றுள்ளது. பீட்டர்சன் இந்த கருத்தை “ஒரே திசையில் நிலையான கீழ்ப்படிதல்” என்னும் பதிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சங்கீதங்கள் அனைத்தும் தேவனிடத்தில் கிட்டிசேரும் ஆவிக்குரிய பயணத்தை முன்வைக்கிறது. 

நம்முடைய புதுமையான ஒன்றின் தேவையைக் குறித்த ஆழமான விழிப்புணர்வுடன் மட்டுமே துவங்கக்கூடியது. பீட்டர்சன் சொல்லுவதுபோல, “கிறிஸ்தவ பாதையில் ஒருவன் ஈர்க்கப்படுவதற்கு அவன் வெறுக்க பழகவேண்டும்…. கிருபையின் பாதையை தெரிந்துகொள்வதற்கு முன்பு உலகத்தின் பாதைகளை வெறுக்க பழகவேண்டும்.” 

நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த உலகத்தைப் பார்த்து நாம் எளிதில் உடைக்கப்பட்டவர்களாயும் சோர்வடைந்தவர்களாயும் கருதக்கூடும். மற்றவர்களுக்கு ஏற்படுகிற தீங்கை இவ்வுலகம் அலட்சியப்படுத்துகிறது. சங்கீதம் 120, இதை தெளிவாய் சொல்லுகிறது: “நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்” (வச. 7). 

நம்முடைய பொய்களிலிருந்து விலக்கி சமாதானத்திற்குள் நடத்தும் நம்முடைய ஒரே உதவி வரும் கன்மலையாகிய நமது இரட்சகரினால், நம்முடைய காயங்கள் அனைத்தையும் புதிய ஆரம்பமாய் மாற்றமுடியும் என்று நம்புவதில் சுகமும் சுதந்திரமும் இருக்கிறது (121:2). இந்த புதிய ஆண்டிற்குள் நாம் நுழையும்போது, அவரையும் அவருடைய வழிகளையும் நாம் நோக்குவோம்.

முன்னேறு! விலகிச் செல்லாதே!

“ஓய்வு” என்ற கவிதையில், வேலை செய்வதிலிருந்து ஓய்வு நேரத்தை பிரிக்கும் நமது போக்கை கவிஞர் நயமாக சவால் விடுகிறார். உண்மையான உழைப்போடு வருவதுதான் உண்மையான ஓய்வாகுமல்லவா? நீங்கள் உண்மையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கையின் கடமைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, “இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்; - அதைப் பயன்படுத்துங்கள் - வீணாக்காதீர்கள்; இல்லையெனில் அது ஓய்வாய் கருதப்படாது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். உனக்கு முன்பாக அழகு நிற்கிறது, அதைக் கண்டு உன் வேலையைச் செய்து, ஓய்வை அனுபவியுங்கள் என்று வரிகள் நீளுகிறது. 

உண்மையான ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டும், அன்பு மற்றும் சேவையின் மூலமாகவே கிடைக்கிறது என்று கவிஞர் முடிக்கிறார். இது தெசலோனிக்கேயர்களுக்கு பவுலின் ஆலோசனையை நினைவுபடுத்துகிறது. தனது அழைப்பை விவரித்து, விசுவாசிகளை ஊக்குவித்த பிறகு, “தேவனுக்கு  நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று” (வச. 11) விசுவாசிகளுக்கு தொடர்ந்து புத்தி சொல்லுகிறார். 

அத்தகைய வாழ்க்கையை, நேர்மை, அன்பு மற்றும் சேவை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (3:12) உங்களை ஆசீர்வதிப்பார் என்று பவுல் வேண்டிக்கொள்ளுகிறார். மேலும், “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று” சபையை ஊக்குவிக்கிறார் (4:11). தேவனை நேசித்து, அவர் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருக்கிறாரோ, அதேபோன்று மற்றவர்களுக்கு உதவிசெய்து விசுவாச வாழ்க்கையின் அழகை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையே மெய்யான ஓய்வாகும் (வச. 12).

அல்லது கவிஞர் சொல்வது போல், உண்மையான மகிழ்ச்சி, “அன்பு மற்றும் சேவையில் நிலைத்திருக்கிறது.” அதுதான் உண்மையான ஓய்வு.

தேவனின் மிருதுவான கிருபை

எமிலி டிக்கின்சன் என்னும் கவிஞர் தன்னுடைய பாடல் வரியொன்றில், “அனைத்து சத்தியத்தையும் சொல்லுங்கள்; ஆனால், கனிவாய் சொல்லுங்கள்” என்று பாடுகிறார். ஏனெனில், தேவனுடைய சத்தியங்களையும்; மகிமையையும் பலவீனமான நாம் முழுமையாய் விளங்கிக்கொள்ள இயலாது. ஆகையால் தேவனுடைய கிருபையையும் சத்தியத்தையும் கனிவாகவும், தெளிவாகவும், இலைமறைகாயாகவும் அறிவிப்பது நல்லது. சத்தியம் படிப்படியாய் ஒளிரவேண்டும்; இல்லையெனில், ஒவ்வொருவரும் குருடனாய் இருக்க நேரிடும்.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளை, “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (வச.2) செயல்படும்படி வலியுறுத்தும் பவுல், இதே போன்ற ஒரு விவாதத்தை மேற்கொள்கிறார். கிறிஸ்து நமக்குக் காண்பிக்கும் கிருபையான வழிமுறைகளே விசுவாசிகளின் சாந்தகுணத்திற்கும், பிறரைத் தாங்கும் சுபாவத்திற்கும் அஸ்திபாரமென்று விளக்குகிறார். இயேசுவும் மனிதனாக அவதரித்து (வச.9-10), மக்கள் எளிதில் அவரை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவர் தன்னை எளிமையாய் வெளிப்படுத்தினார்.

“நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்;” (வச.11), தேவன் மென்மையான மற்றும் அன்பின் வழிகளில் மக்கள் வளரவேண்டிய விதத்தில் அவர்களுக்குத் தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். நாம் முதிர்ச்சியடையும்போது, பலவீனமான வழிகளில் நம்பிக்கையைத் தேடாமல் (வச.10), கிறிஸ்துவின் அன்பின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம் (வச.15-16).

நமது எதிர்காலத்திற்கான தேவ உதவி

உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் "அனுதாப இடைவெளி" எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, "வாழ்நாளெல்லாம்" (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.

தாழ்மையே சத்தியம்

தேவன் தாழ்மையை ஏன் கனப்படுத்துகிறார் என்னும் கேள்விக்கு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுவாசி ஆவிலாவின் தெரசா உடனே பதில் கண்டுபிடித்தார்: ஏனென்றால், தேவன் என்பது உயர்வான உண்மை, அதேபோல் தாழ்மையும் உண்மை... நமக்குள் இருக்கும் நல்லவைகள் எதுவுமே நம்மிடமிருந்து வருவதில்லை. மாறாக, தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல, கிருபையின் தண்ணீரண்டையிலிருந்தும், நம்முடைய படைப்புகளுக்கு உயிர்கொடுக்கும் சூரியனிலிருந்தும் தான் நம் உழைப்பிற்கு பலன் கிடைக்கிறது. தெரசா, “தாழ்மையே ஜெபத்தின் அஸ்திபாரம்; ஜெபத்தில் எந்த அளவிற்கு நம்மை தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்கு தேவன் நம்மை உயர்த்துவார்” என்று ஜெபமே அந்தத் மனத்தாழ்மையை நமக்கு கொடுக்கும் என அறிவுறுத்துகிறார். 

தாழ்மையைக் குறித்த தெரசாவின் வார்த்தைகள் யாக்கோபு 4ஆம் அதிகாரத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது. அதில் யாக்கோபு, தேவ கிருபையை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு விரோதமான பெருமையைக் குறித்து எச்சரிக்கிறார் (வச. 1-6). பேராசை, மனச்சோர்வு, தொடர் பிரச்சனைகள் ஆகியவைகளால் சூழப்பட்ட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபெறுவதற்கு ஒரே வழி, நம்முடைய பெருமையை அகற்றி, மனத்தாழ்மையினால் நம்முடைய இருதயத்தை நிறைப்பதே என்று யாக்கோபு வலியுறுத்துகிறார். இன்னும் தெளிவாய் சொன்னால், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 10). 

கிருபையின் தண்ணீரண்டையில் நாம் நாட்டப்படுவோமாகில், பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் நாம் போஷிக்கப்படுவது நிச்சயம் (3:17). அவரில் நிலைத்திருந்தால் மாத்திரமே நாம் சத்தியத்தில் பலப்பட முடியும்.

திறவுகோல்

“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?" என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம். 

“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்" என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!" (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.

சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார். 

 

நம்பகமான அன்பு

ஏன் அதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை? என் உணர்ச்சிகள் சோகம், குற்ற உணர்ச்சி, கோபம் மற்றும் குழப்பம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, எச்சரிப்பு சத்தத்திற்கு செவிகொடுக்காததினால், எனக்கு நெருக்கமான ஒருவருடனான உறவைத் துண்டிக்கும் வேதனையான முடிவை எடுத்தேன். ஆனால் இன்று நான் இருக்கும் அதே ஊரில் தான் அவளும் இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டவுடன், என்னுடைய எண்ணம் கடந்த கால நிகழ்வுகளை எனக்கு நினைப்பூட்டியது.

என் மனதை அமைதிப்படுத்த நான் சிரமப்பட்டபோது, வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. அந்த பாடல் துரோகத்தின் வேதனையை மட்டுமல்லாது, அந்த தீங்கு விளைவித்த நபருடன் மீண்டும் சேருவதற்கு துடிக்கும் இருதயத்தை பிரதிபலித்தது. அந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில், என் இருதயத்தின் ஆழத்தில் இருந்த துக்கத்தை அறிந்து என்னையறியாமல் நான் கண்ணீர் சிந்த ஆரம்பித்தேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று பவுல் ரோமர் 12:9இல் அன்பைக் கடந்துசெல்லும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஆயினும்கூட, உண்மையான அன்பை அறிந்து கொள்வதே நம் இதயத்தின் ஆழமான ஏக்கமாகும் - அது சுயத்தையோ சூழ்ச்சியையோ கொண்டுள்ள அன்பு அல்ல; இரக்கமும் தியாகமும் கொண்டுள்ள அன்பு. அன்பு என்பது பயத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தேவையல்ல; மாறாக, இருவரின் நலனையும் பொருட்படுத்தும் ஓர் அன்பான அர்ப்பணிப்பு (வச. 10-13).

அதுவே நற்செய்தியாகிய சுவிசேஷம். கடைசியாக, நாம் நம்பக்கூடிய, நமக்கு எப்போதும் சேதம் விளைவிக்காத அன்பை நாம் கிறிஸ்துவின் மூலம் அடையாளம் கண்டுகொண்டோம் (13:10). சுதந்திரமாய் வாழும் வாழ்க்கையே அவருடைய அன்பில் வாழ்வதாகும்.

ஆழமான துயரம்

குணப்படுத்தமுடியாத ஒரு அரியவகை மூளைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கரோலின், ஒரு வித்தியாசமான சேவையினால் வாழ்வில் நம்பிக்கையும், நோக்கத்தையும் பெற்றாள். ஒரு தன்னார்வ புகைப்படக்காரராக, கடும் வியாதியுற்ற பிள்ளைகளையும், அவர்கள் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்தார். இந்த சேவையின் மூலமாய், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளோடு இருக்கும் விலையேறப்பெற்ற தருணங்கள் புகைப்படமாகின. துயரமான, இன்பமான மற்றும் அழகான எல்லா தருணங்களும் படமாக்கப்பட்டது. அந்த குடும்பங்கள் அனைத்தும், இக்கட்டான தருணங்களிலும் அன்புகாட்டவே தெரிந்துகொண்டதாக அவள் அறிவிக்கிறாள்.
துயரத்தை படம் பிடிப்பதில் சொல்ல முடியாத ஒரு வல்லமை இருக்கிறது. அதின் அழிக்கக்கூடிய வல்லமையும், அதேநேரத்தில் அவற்றின் மத்தியில் இருக்கும் அழகையும், நம்பிக்கையையும் நாம் அனுபவிக்கமுடியும்.
யோபு புத்தகம் முழுமையும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் நடைபெற்ற ஒரு துயரத்தின் புகைப்படம் எனலாம் (1:18-19). பல நாட்கள் யோபுவோடு அமர்ந்திருந்த அவனுடைய நண்பர்கள், அவனுடைய அந்த துயரத்தினால் சலிப்படைந்து, அதை குறைக்கும்பொருட்டு, அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று விளக்குகின்றனர். ஆனால் அதில் ஒன்றையும் ஏற்காத யோபு, இந்த துயர நிலையின் அனுபவத்தை சாட்சியாக, “கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (19:24) என்கிறான்.
யோபு புத்தகத்தில், நம் துயரங்களினூடே ஜீவனுள்ள தேவனுக்கு நேரே திரும்புவது உளிவெட்டாகப் பதிந்துள்ளது (வச. 26-27). அவர் நம் வேதனையில் நம்மை தேற்றி, மரணத்திலிருந்து உயிர்தெழுதலுக்கு நம்மை

அறிவின் எல்லைகளைக் கடந்து

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் வேலைகளை இழந்த அநேகருடைய வரிசையில் என் கணவரும் ஒருவர். அது, எங்கள் வாழ்வின் கடினமான நாள். தேவன் எங்கள் தேவைகளை சந்திப்பார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் அது எப்படி நடக்கும் என்ற நிச்சயமில்லாமை எங்களை பயமுறுத்தியது.

குழப்பமான என் மனநிலைகளை கடக்கையில், பதினாறாம் நூற்றாண்டின் கவிஞர், சிலுவையின் ஜான் என்பவரின் பாடல்வரிகளை நினைத்து பார்த்தேன். “போகும்பாதை அறியாமல், உள்ளே சென்றேன்” என்று தலைப்பிடப்பட்ட அந்த பாடல், அர்பணிப்பின் பிரயாணம் மனிதஅறிவின் அனைத்து எல்லைகளையும் கடந்து, அனைத்திலும் தெய்வீகத்தை கண்டுகொள்ளும் ஆச்சரியத்தை சித்தரிக்கிறது.. எனவே நானும், எனது கணவரும் அந்த காலகட்டத்தில் அதைச் செய்ய முயற்சித்தோம். எங்களால் புரிந்துகொள்ளக்கூடிய, சமாளிக்கக்கூடியவைகளின் மீதிருந்த எங்கள் கவனத்தை; எங்களை சுற்றிலும் அழகான, எதிர்பாராத, விந்தையான வழிகளில் வெளிப்படும் தேவன் மீது திருப்பினோம்.

பவுல் அப்போஸ்தலன், காணப்படுகிறவைகளிலிருந்து காணப்படாதவைகளுக்கு, வெளித்தோற்றத்திலிருந்து உள்ளான நிஜத்திற்கு, தற்காலிக துன்பங்களிலிருந்து “மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கு” விசுவாசிகளை அழைக்கிறார் (2 கொரிந்தியர் 4:17).

அவர்களுடைய போராட்டங்களை குறித்து கரிசனை இல்லாமல் பவுல் இவ்வாறு வலிறுயுறுத்தவில்லை மாறாக அவர்கள் புரிந்தகொள்ளக் கூடியவைகளை அவர்கள் விட்டுவிடுகையில் தான் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் ஆறுதல், சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை அவர்களால் அனுபவிக்க கூடும் என்று அவர் அறிந்திருந்தார். (வச.10,15-16). கிறிஸ்துவின் ஜீவியம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது என்பதை அவர்களுக்கு அறியச்செய்வதற்காகவே பிரயாசப்படுகிறார்.