இயேசு நமது மீட்பர்
ஒரு சாதாரண தொங்கு கயிா்கூர்தி பயணமாகப் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் ஆரம்பித்த அந்த பயணம், பயங்கரமான சோதனையாக மாறியது. சவாரி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இரண்டு துணை கயிறுகள் அறுந்து விழுந்ததில், பள்ளிக் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள் நூற்றுக்கணக்கான அடிகளுக்கு மேல் அந்தரங்கத்தில் தொங்கினர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பன்னிரண்டு மணி நேர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் ஜிப்லைன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி பயணிகளை மீட்டனர்.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அந்த மீட்புக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஆனால் பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி மீட்கும் இயேசுவின் நித்திய பணியுடன் ஒப்பிடுகையில் அவர்களின் பணி பெரிதல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு முன், ஒரு தூதன் மரியாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி யோசேப்பை அறிவுறுத்தினார், ஏனெனில் அவளுடைய கரு "பரிசுத்த ஆவியினால்" (மத்தேயு 1:18, 20) அருளப்பட்டது. யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிடவும் சொல்லப்பட்டான், ஏனெனில் அவர், "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (வ.21). இருப்பினும், இந்த பெயர் முதல் நூற்றாண்டில் பொதுவானதாக இருந்தபோதிலும், இந்த குழந்தை மட்டுமே இரட்சகராக இருக்கத் தகுதி பெற்றது (லூக்கா 2:30-32). மனந்திரும்பி தம்மை நம்புகிற அனைவரின் நித்திய இரட்சிப்பையும் முத்திரையிட்டுப் பாதுகாக்கக் கிறிஸ்து சரியான நேரத்தில் வந்தார்.
நாம் அனைவரும் பாவம் மற்றும் மரணத்தின் தொங்கூர்தியில் சிக்கி, தேவனிடமிருந்து நித்திய பிரிவின் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தம்முடைய அன்பினாலும் கிருபையினாலும் இயேசு நம்மை மீட்டு, நம் பரலோகத் தகப்பனிடம் பாதுகாப்பாகக் கொண்டுவர வந்தார். அவரை துதிப்போம்!
கிறிஸ்துவில் வலுவான ஆதரவு
லண்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரர், பெரிய பந்தயத்தில் தனியாக ஓடக்கூடாது என்பது ஏன் இன்றியமையாதது என்பதை அனுபவித்தார். பல மாதங்கள் கடினமான ஆயத்தங்களுக்குப் பிறகு, அவர் வலுவான இடத்தில் முடிக்க விரும்பினார். ஆனால் அவர் இறுதி கோட்டை நோக்கித் தடுமாறியபோது, இருமடங்கு சோர்வுடன் சரிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்தார். அவர் தரையில் விழுவதற்கு முன், இரண்டு சக வீரர்கள் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர்; ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலதுபுறமும் நின்று, போராடும் ஓட்டப்பந்தய வீரருக்கு ஓட்டத்தை முடிக்க உதவினார்கள்.
அந்த ஓட்டப்பந்தய வீரரைப் போலவே, பிரசங்கியின் எழுத்தாளரும், பிறர் நம்முடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதால் ஏற்படும் பல முக்கியமான நன்மைகளை நமக்கு நினைவூட்டுகிறார். சாலொமோன், "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" (பிரசங்கி 4:9) என்ற கொள்கையை முன்வைத்தார். கூட்டு முயற்சிகள் மற்றும் பரஸ்பர உழைப்பின் நன்மைகளை அவர் முக்கியத்துவப்படுத்தினார். கூட்டாண்மையில், "அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்" (வ. 9) என்றும், கடினமான காலங்களில் "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்" (வ.10) என்றும் அவர் எழுதினார். இருண்ட மற்றும் குளிரான இரவுகளில், நண்பர்களின் அரவணைப்பில் "சூடுண்டாகும்" (வ.11). மேலும் ஆபத்தின் போது, "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்" (வ. 12). யாருடைய வாழ்க்கை ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதோ, அவர்களால் பெரும் வலிமையைப் பெற முடியும்.
நம்முடைய எல்லா குறைகள் மற்றும் பலவீனங்களுடன், இயேசுவை விசுவாசிக்கிற குழுவின் வலுவான ஆதரவும் பாதுகாப்பும் நமக்குத் தேவை. அவர் நம்மை வழிநடத்திச் செல்லுகையில், நாம் ஒன்றாக முன்னேறுவோமாக.
ஆவிக்குரிய மேன்மை
அமெரிக்காவைச் சேர்ந்த ஜே ஸ்பைட்ஸ், டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்டபோது, அவர் பெற்ற முடிவுகளுக்கு எதுவும் அவரை தயார்படுத்தியிருக்க முடியாது. அவற்றில் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் தேசத்தின் இளவரசர்! விரைவில் விமானத்தில் ஏறி அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் வந்ததும், அரச குடும்பத்தினர் அவரை வரவேற்று, ஒரு பண்டிகை கொண்டாட்டம், ஆடல், பாடல், பதாகைகள் மற்றும் அணிவகுப்பு ஆகியவற்றால் வரவேற்றனர்.
தேவனுடைய நற்செய்தி அறிவிப்பாக இயேசு பூமிக்கு வந்தார். அவர் தனது சொந்த மக்களாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு நற்செய்தியைக் கூறவும், இருளிலிருந்து வெளியேறும் வழியைக் காட்டவும் செய்தார். “மெய்யான ஒளியை” (யோவான் 1:9) நிராகரித்து, அவரை மேசியாவாக ஏற்க மறுத்து (வச. 11) பலர் செய்தியை அக்கறையின்மையுடன் பெற்றனர். ஆனால் நம்பிக்கையின்மையும் அக்கறையின்மையும் எல்லா மக்களிடையேயும் காணப்படவில்லை. சிலர் மனத்தாழ்மையுடனும் மகிழ்ச்சியுடனும் கிறிஸ்துவின் அழைப்பைப் பெற்று, பாவத்திற்காக தேவனுடைய இறுதிப் பலியாக அவரை ஏற்றுக்கொண்டனர். மேலும் அவருடைய நாமத்தின் மீது விசுவாசம் வைத்தனர். இந்த உண்மையுள்ள மீதியானவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்கள் ஆவிக்குரிய மறுபிறப்படைந்து ராஜவம்ச பிள்ளைகளாய் “தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (வச. 12).
நாம் பாவம் மற்றும் இருளில் இருந்து திரும்பும்போது, இயேசுவை பெற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைக்கும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகள், அவருடைய ராஜ குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். ராஜாவின் பிள்ளைகளாக இருக்கும் பொறுப்புகளை ஏற்று வாழும்போது ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்.
கிறிஸ்துவுக்குள் உண்மையை பேசுதல்
ஒரு நபர் தனது தனிப்பட்ட போக்குவரத்து டிக்கெட்டுகளை பொய் சொல்லி பெறுதில் வல்லவர். அவர் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் முன் ஆஜரானபோது, “நான் என் சிநேகிதியுடன் சண்டையிட்டேன், அவள் எனக்குத் தெரியாமல் என் காரை எடுத்துச் சென்றுவிட்டாள்" என்று கதை சொல்லுவார். மேலும், பணியில் இருந்தபோது தவறான நடத்தைக்காக அவர் பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் இறுதியாக அவர் மீது நான்கு பொய்ச் சாட்சியங்கள் மற்றும் ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த மனிதருக்கு, பொய் சொல்வது வாழ்நாள் பழக்கமாகிவிட்டது.
இதற்கு நேர்மாறாக, உண்மையைச் சொல்வது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான பழக்கம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். எபேசியர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்படைப்பதன் மூலம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிடுவார்கள் என்று அவர் நினைப்பூட்டினார் (எபேசியர் 2:1-5). இப்போது, அவர்கள் புதிய நபர்களைப் போல வாழ வேண்டும், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிட்ட செயல்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் “பொய்யைக் களைந்து,” “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (4:25) என்று ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. அது திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்கும், எபேசியர்கள் எப்போதும் தங்கள் வார்த்தைகள் செயல்கள் மூலம் "மற்றவர்களைக் கட்டியெழுப்புவதாக" இருக்க வேண்டும் (வச. 29).
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவது போல (வச. 3-4), இயேசுவின் விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் சத்தியத்திற்காக பிரயாசப்படுவோம். அப்போது திருச்சபை ஒன்றுபடும், தேவன் மகிமைப்படுத்தப்படுவார்.
மூடப்படாத பாவங்கள்
ஒரு திருடன் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையை உடைத்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கண்ணாடியை உடைத்து, தொலைபேசிகள் மற்றும் பலவற்றை திருட ஆரம்பித்தான். அட்டைப் பெட்டியால் தலையை மூடிக்கொண்டு கண்காணிப்பு கேமராவில் இருந்து தனது அடையாளத்தை மறைக்க முயன்றான். ஆனால் திருட்டின் போது, பெட்டி சிறிது நேரம் சாய்ந்து, அவனது முகத்தை வெளிப்படுத்திக் காண்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, கடையின் உரிமையாளர் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து, காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கொள்ளையனை அருகிலுள்ள இன்னொரு கடைக்கு வெளியே கைது செய்தனர். மறைந்திருக்கும் ஒவ்வொரு பாவமும் ஒரு நாள் வெளிப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
நம் பாவங்களை மறைக்க முயற்சிப்பது மனித இயல்பு. ஆனால் பிரசங்கியில், நாம் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் மறைவான ஒவ்வொன்றும் அவருடைய நீதியான பார்வைக்கும் நியாயமான தீர்ப்புக்கும் முன் கொண்டுவரப்படும் (12:14). பிரசங்கி, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (வச. 13) என்று சொல்லுகிறார். பத்துக் கட்டளைகள் கண்டித்த மறைவான விஷயங்கள் கூட (லேவியராகமம் 4:13) அவருடைய மதிப்பீட்டிலிருந்து தப்ப முடியாது. நன்மையோ தீமையோ, ஒவ்வொரு செயலையும் அவர் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வருவார். ஆனால், அவருடைய கிருபையின் காரணமாக, இயேசுவினால் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பையும், நமக்கான அவருடைய தியாகத்தையும் நாம் காணலாம் (எபேசியர் 2:4-5).
அவருடைய கட்டளைகளை நாம் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும்போது, அது அவரைப் பற்றிய பயபக்திக்கும், பொருந்தக்கூடிய வாழ்க்கை முறைக்கும் வழிவகுக்கும். நம்முடைய பாவங்களை அவரிடம் கொண்டுபோய், அவருடைய அன்பான, மன்னிக்கும் இதயத்தை புதிதாக அனுபவிப்போம்.
இயேசுவில் இளைப்பாறுதலை கண்டடைதல்
இளைப்பாறுதலற்ற ஆத்துமா செல்வத்திலும், வெற்றியிலும் ஒருபோதும் திருப்தியடையாது. ஒரு மரித்துப்போன மேற்கு நாட்டிய இசை ஜாம்பவான் இந்த உண்மைக்குச் சாட்சி. கிட்டத்தட்ட அவரது நாற்பது பாடல் தொகுப்புகளும், பல தனிப்பாடல்களும் பலமுறை விற்பனையில் முதல் பத்து இடங்களைப் பெற்று, வெற்றிகண்டிருந்தார். ஆனால் அவர் பல திருமணங்களைச் செய்து, பலமுறை சிறையிலிருந்தார். அவரது எல்லா சாதனைகளிலும் கூட, அவர் ஒருமுறை, " இசை, திருமணங்கள், அர்த்தங்கள் என்று எதாலும் நான் வெற்றிபெற முடியாத ஒரு அமைதியின்மை என் ஆத்துமாவில் உள்ளது. . . . அது இன்னும் பெரியளவில் இருக்கிறது. அது நான் மரிக்கும் நாள்மட்டும் இருக்கும்" என்று புலம்பினார். அவரது வாழ்க்கை முடிவடைவதற்கு முன்பு அவர் தனது ஆத்துமாவில் இளைப்பாறுதலைக் கண்டிருக்கலாம், துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
இந்த இசைக்கலைஞரைப் போலப் பாவத்தாலும், அதன் விளைவுகளாலும் போராடிச் சோர்ந்து போன அனைவரையும் இயேசு தனிப்பட்ட முறையில் தன்னிடம் வரும்படி அழைக்கிறார். அவர், "என்னிடத்தில் வாருங்கள்" (மத்தேயு 11:28) என்கிறார். நாம் இயேசுவிலுள்ள இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நம்மிடமிருந்து பாரங்களை அகற்றி, "நமக்கு இளைப்பாறுதல் அளிப்பார்". நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் வழங்கும் பரிபூரண வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும் (யோவான் 10:10). கிறிஸ்துவின் சீடத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்கும்போது, அதின் விளைவாக நமது "ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்" (மத்தேயு 11:29) கிடைக்கும் .
நாம் இயேசுவிடம் வரும்போது, அவருக்கு முன்பான நமது பொறுப்புணர்வை அவர் குறைப்பதில்லை. மாறாக அவரில் வாழ்வதற்குப் புதிதானதும், லேசானதுமான சுமையான வழியை வழங்குவதன் மூலம் அவர் நமது அமைதியற்ற ஆத்துமாக்களுக்குச் சமாதானம் தருகிறார். அவர் நமக்கு மெய்யான இளைப்பாறுதல் தருகிறார்.
தேவன் தலைசிறந்த படைப்பு
மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.
மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது கொண்டாடினார், "என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).
மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள், நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.
வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது
கெட்டவார்த்தை உபபோகிப்பதை எவ்வாறு அகற்றுவது? ஓர் உயர்நிலைப் பள்ளி “கெட்ட வார்த்தை பேசுவதில்லை” என்று உறுதிமொழியை எடுத்தது. அந்த பள்ளியின் மாணவர்கள் “நாங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அதின் சுவர்களிலும் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளையோ தவறான கருத்துக்களை கிறுக்கவோ பேசவோ மாட்டோம்” என்று உறுதிமொழியேற்றனர். இது ஓர் உன்னத முயற்சி. ஆனால், இயேசுவின் கூற்றுப்படி, எந்த விதிமுறைகளும் உறுதிமொழிகளும் ஒருபோதும் தவறான பேச்சின் வாசனையை மறைக்க முடியாது.
நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் துர்நாற்றத்தை நீக்குவது நம் இதயத்தை புதுப்பிப்பதில் இருந்து தொடங்குகிறது. பழங்களைக் கொண்டு மரத்தின் வகையை மக்கள் அடையாளம் காண்பது போல் (லூக்கா 6:43-44), நம்முடைய பேச்சு, நம் இருதயம் அவரோடும் அவருடைய வழிகளோடும் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாய் இருக்கிறது என்று இயேசு கூறுகிறார். பழம் என்பது ஓர் நபரின் பேச்சைக் குறிக்கிறது. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” (வச. 45). நம் வாயிலிருந்து வெளிவருவதை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், முதலில் நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.
மறுரூபமாக்கப்படாத இருதயத்திலிருந்து வெளிவரும் தவறான வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வெளிப்புற வாக்குறுதிகள் பயனற்றவை. முதலில் இயேசுவை (1 கொரிந்தியர் 12:3) விசுவாசித்து, பிறகு நம்மை நிரப்ப பரிசுத்த ஆவியானவரை அழைப்பதன் மூலம் மட்டுமே தவறான பேச்சை நாம் அகற்ற முடியும் (எபேசியர் 5:18). தொடர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் (வச. 20) ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதற்கும் (4:15, 29; கொலோசெயர் 4:6) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர் நமக்குள் செயல்படுகிறார்.
நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்
பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.
அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம்.
தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8).