இன்று உனக்காக ஜெபிக்கிறேன்
நாம் ஒரு குழப்பமான சூழ்நிலையையோ அல்லது கடினமான பிரச்சனையையோ எதிர்கொள்ளும் பொழுது, அநேகந்தரம், கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர, சகோதரிகளிடம் நமக்காக ஜெபிக்கக் கேட்போம். நம்மேல் அக்கறைகொண்டவர்கள் தங்களுடைய ஜெபத்தினாலே நம்மை தாங்கி தேவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பதை அறியும் பொழுது, நமக்கு மிகப்பெரிய ஆறுதலாயிருக்கிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கிய கிறிஸ்தவ நண்பர்கள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒருவேளை நீங்கள் வாழும் இடத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியை எதிர்க்கலாம். ஆகவே, யார் உங்களுக்காக ஜெபிப்பார்கள்?
வேதத்தில், வெற்றியை அறிவிக்கும் மகத்தான அதிகாரங்களில் ஒன்றான ரோமர் 8ஆம்…
சோர்வுற்றவர்களுக்கு தேவையான வார்த்தைகள்
முப்பது வயது நிரம்பிய சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis), தன் தகப்பனார் இறந்த சில நாட்களுக்குப் பின், 20 வருடங்களுக்கு முன் வியாதிப் படுக்கையில் இருந்து மரித்த தன் தாயாரை அப்பொழுது கவனித்துக் கொண்ட பெண்ணிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். அப்பெண் தன் தகப்பனாரின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அவரைப்பற்றி ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டிருந்தார். “என் அன்பிற்குரிய தாதிமார் டேவிசன் (Nurse Davison), உங்களை குறித்த ஞாபகமா? கண்டிப்பாக ஞாபகமிருக்கிறது,” என பதிலனுப்பபினார்.
ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில், தன் வீட்டில் அப்பெண்ணின்…
நல்ல மாதிரி
சிறுபிள்ளைகளுக்கான பிரசங்கத்தைக் கேட்கும்படி கூடியிருந்த சிறுபிள்ளைகளைப் பார்த்து, எங்கள் சிறுவர்களுக்கான போதகர், “இன்று நாம் ஒன்றைப் போல நடிக்கும் விளையாட்டை விளையாடப் போகிறோம். நான் ஏதாவது ஒன்றின் பெயரைக் கூறுவேன், உடனே நீங்கள் அதன் செயலைச் செய்து காட்ட வேண்டும். தயாரா? கோழிக்குஞ்சு” என்று கூறினார். உடனே அக்குழந்தைகள் தங்கள் கைகளை சிறகு போல சிறகடித்து, கோழிக்குஞ்சு போல கீச் கீச்சென்று கத்தினார்கள். அடுத்ததாக யானை, பின்பு கால் பந்து வீரர், அதனை தொடர்ந்து நடன மங்கை (ballerina), கடைசியாக இயேசு என்றார் .…
பகிர்ந்து கொள்வோம்
டிஸ்னி லேண்டில் புகழ்பெற்ற ஒரு காட்சியைக் காண்பதற்காக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபொழுது, வரிசையில் நின்ற அநேக மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதைக் குறித்து குறைசொல்லி கொள்ளாமல் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததைக் கவனித்தேன். அப்படி வரிசையில் நின்றபொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகக்கூடிய காரணம் என்னவாக இருக்குமென்பதைக் குறித்து ஆழமாக சிந்தித்தேன். அங்கு நின்றவர்களில் ஒரு சிலர்தான் தனிநபர்களாக வந்திருந்தார்கள். சிநேகிதர்கள், குடும்பங்கள், குழுக்கள், தம்பதியராக வந்திருந்தவர்கள், வரிசையில் நிற்பதைப்பற்றி பேசுவதைவிட வேறுபல அனுபவங்களைக் குறித்து ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கையும் தனிமையாக…
உங்களது எண்ணங்களை உருவாக்குதல்
1964ல் மார்ஷல் மக்லூஹன் “ஊடகங்களே செய்தி”, என்ற வாக்கியத்தை உருவாக்கின காலத்தில், கணினி கிடையாது, கைபேசிகள் அறிவியல் கற்பனைகளாக இருந்தன, வலைத்தளம் இல்லவே இல்லை. இக்காலத்தில் நமது சிந்திக்கும் திறனாற்றல் எண்கள் மூலம் சேகரிக்கப்படும் முறையினால் (Digital) தாக்கம் அடைந்துள்ளதை மார்ஷல் முன்னமே அறிவித்து விட்டார். நிக்கலோஸ் கார் எழுதின த ஷேலோஸ் (The Shallows) என்ற புத்தகத்தில் இணையதளம் நமது மூளைக்கு என்ன செய்கிறது என்பது பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “தகவல் தொடர்பு சாதனங்கள், நம்முடைய சிந்தனைக்கு வேண்டிய கருத்துக்களைத் தருகின்றன. ஆனால்…
நாம் கற்பனை செய்வதற்கும் மேலாக
எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த விளையாட்டுப் பொருட்களாகக் கருதப்பட்டவை எவை? ஒரு குச்சி, ஒரு பெட்டி, நூல், அட்டையினாலான ஒரு குழாய், தூசி, மண் இவைகள் தான் என்று யோனத்தான் H. லியு கருத்து தெரிவித்துள்ளார். இவைகள் அனைத்துமே எளிதாகக் கிடைக்கக் கூடியவைகள், பல்வேறு பயன் கொண்டவைகள், எல்லா வயதினருக்கும் தகுதியானவைகள், விலை குறைவானவைகள், மேலும் கற்பனா சக்தியினால் சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடியவைகள். இவைகள் செயல்பட பாட்டரிகள் தேவை இல்லை.
கற்பனா சக்தி நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, எபேசுவில் இயேசுவை…
அனுமதிக் கட்டணம்
ஆண்டு தோறும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் லண்டனிலுள்ள தூய பவுல் பேராலயத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். 17ம் நூற்றாண்டின் பிந்திய காலத்தில் சர். கிறிஸ்டோபர் ரென் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அவ்வாலயத்தைப் பார்ப்பதற்கு வசூலிக்கும் அனுமதிக் கட்டணம் மிகவும் பொருத்தமானதே. கிறிஸ்தவ ஆராதனைக் கூடமான இதைச் சுற்றுலா பயணிகள் பார்ப்பது என்பது முக்கியமான ஒன்றல்ல. ஆனால் “பலதரப்பட்ட மக்கள் அப்பேராலயத்திற்குள் வரும்பொழுது இயேசு கிறிஸ்துவில் தேவனின் மறுரூபமாக்கும் பிரசன்னத்தை உணர்வடையச் செய்வது” தான் பிரதானமான நோக்கமாகும். அவ்வாலயக் கட்டடத்தை…
நகராமல் நட
“மார்க்டைம் மார்ச்” என்ற இராணுவ உத்தரவின் அர்த்தம் என்னவெனில் முன்நோக்கிச் செல்லாமல் நிற்கும் இடத்திலேயே நட என்பதாகும். இது எந்த வித முன்னேற்றமுமின்றி அடுத்து முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் செயல் ஆகும்.
அன்றாட வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லாத நிலைப்பாடு, எந்தவித நோக்கமும், வேலையும் செய்யாமல், ஆனால் அதே சமயத்தில் காத்திருக்கும் நிலையை “மார்க்டைம்” என்ற பதம் குறிப்பிடுகிறது. இது ஓர் தேக்கமுற்ற வாழ்க்கைச் சூழ்நிலை போன்று காணப்படுகிறது.
இதற்கு எதிர்மாறாக வேதத்தில் நாம் வாசிக்கும் ‘காத்திரு’ என்ற பதம் ஆவலோடு…
ஏதேனும் ஒன்றை நான் அறிந்து கொள்ள வேண்டுமா?
ஓர் இசைக்கச்சேரியின் போது, பாடகரும், பாடல் இயற்றுபவருமான டேவிட் வில்காக்ஸிடம் பார்வையாளர்களிடமிருந்து வந்த ‘அவர் எவ்வாறு பாடல்களை இயற்றுகிறார்’ என்ற கேள்விக்குப் பதிலளித்தார். பாடல் இயற்றுவதில் மூன்று காரியங்கள் அடங்கியுள்ளது. ஓர் அமைதலான அறை, ஓர் வெற்றுப்பக்கம், நான் ஏதேனும் ஒர் காரியத்தை அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறதா? என்ற ஓர் கேள்வி என்று பதிலுரைத்தார். இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், நமது அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ள அவர் கூறிய பதில் மிகவும் அதிசயிக்கத்தக்க அணுகுமுறையாக எனக்குப்பட்டது.
இயேசு மக்களிடையே செய்த ஊழியங்கள்…