எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

arpithaldarகட்டுரைகள்

ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ்

"ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள…

இயேசுவைக் கொண்டாடுதல்

 யேசு கிறிஸ்து, தம்முடைய பிறப்பு, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாய் இந்த பூமிக்கு கொண்டுவந்த சுகத்தையும் ஒப்புரவாகுதலையும் குறித்து நான் சிந்தித்தேன். எங்கள் திருச்சபையில் ஆராதனை, திருமணம் மற்றும் நீதி போன்ற மையக் கருத்துக்களை அறிந்துகொள்ளும் வேத பாட வகுப்பு ஒழுங்குசெய்யப்பட்டது. அதன் கடைசி வகுப்பில், உலகத்தில் இருக்கும் அநீதியை அகற்றுவதற்க்கு, முதலில் தங்கள் இருதயத்தில் இருக்கும் அநீதியை அகற்ற வேண்டும் என்று போதிக்கப்பட்டது.

அந்தக் காலை ஆராதனைக்குப் பின், திருச்சபையின் முன் வளாகத்தில் என்னை ஒரு நபர் சந்தித்து, தம்மை மன்னிக்குமாறு கேட்டார். உடனே,…

இழப்பிற்கு பின்பான வாழ்க்கை

"நல்ல துக்கம்!” இதை நீங்கள் யோசித்தால், இது வழக்கமான சொல் அல்ல. நேர்மையாக கேட்டால், நல்ல துக்கம் என்றொன்று உண்டா? ஆம்; துக்கம் மாறும்போது, அது நன்மையே. நம்முடைய இழப்புகளுக்கு நாம் துக்கப்படும் போது நமது ஆத்துமாவிற்கான ஆறுதலை எப்படி கண்டடைய கூடும் என்பதை இழப்புடன் வாழ்வது வெளிப்படுத்துகிறது. பின்வரும் பக்கங்களில், ஆலோசகரும், துக்கப்படுபவருமான டிம் ஜாக்சன், எப்படி வாழ்க்கையின் மனவேதனைகளில் உட்சாய்வது, நம்முடைய சிருஷ்டிகர் மேலும், மற்றவர்கள் மேலும் நாம் சார்ந்திருக்க வழிவகைச் செய்கிறது என்பதை ஆராய நம்மை அழைக்கிறார்.

என் இழப்பின் கோடை…

சாம்பலிலிருந்து

விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்? எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதே அறுவடையின் விதிமுறை. முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ண வொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”(கலாத்தியர் 6:7) என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே எண்ணம் யோபு புத்தகத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. யோபின் நண்பர்களில் ஒருவர் யோபின் அழிவை நியாயமான தண்டனையாகவே கருதினார். “குற்றம் இல்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப் பாரும். நான்…

கோவிட்டுக்கும் அப்பால்

2004-ல் ஸ்ரீலங்காவையும் மற்ற ஆசிய நாடுகளையும் சுனாமி தாக்கியபோது, அச்சமயத்தில் கிறிஸ்துவுக்கு வாலிபர் அமைப்பின் தேசிய இயக்குநராக இருந்த அஜித் பெர்னாண்டோ அவர்கள் தான் பார்த்த பெருந்துயர் சம்பவங்களின் அடிப்படையில் “சுனாமிக்குப் பின்” என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். பின்னாட்களில் அமெரிக்க வளைகுடாவை தாக்கிய கேட்ரீனா மற்றும் ரீடா புயல் பேரழிவுக்குப் பின் அந்தப் புத்தகம் சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டது.

சொல்லொணா இழப்புகள் மற்றும் பயங்கரங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு அவருடைய புத்தகம் சொல்லும் செய்தி மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே, அதை தற்காலத்திற்கு…

மூச்சை இறுக்கிப் பிடித்தல்

எங்கள் அறையின் மூலையில் இருந்த அந்த சிறிய பஞ்சு பொதிந்த நாற்காலியில் அமர்ந்து அவர் சுவாசிப்பதை பார்த்துக்கொண்டிருப்பேன். வாழவும், சாகவும் ஒரே நேரத்தில் அவர் போராடிக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் திருமண தம்பதியினரின் மூச்சும், இதய துடிப்பின் நாதங்களும் கூட ஒன்றிவிடுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு இது புரியாது ஆனால் இது உண்மையென்று உங்களுக்கும் எனக்கும் தான் தெரியும். சுவாசத்தை உள்ளிழுத்து, வெளியேற்றும் இடைவெளி, நீண்டு இனி இடைவெளியே இல்லை என்றானது. இனியும் வெளியேற எந்த சுவாசமும் இல்லையென்றபோது, நீண்ட காத்திருப்புக்கு முடிவும் வந்தது.…

துக்கத்தின் பாரம்

என் பெற்றோர் துக்கத்துடன் போராடிகொண்டிருந்தது எனது ஆரம்பகால குழந்தை பருவ நினைவுகளில் ஒன்றாகும். என்னுடைய மாமா கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பதாக ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் எனது அத்தையையும் (தந்தையின் சகோதரி) மற்றும் மூன்று பிள்ளைகளை நிர்கதியாய் விட்டுவிட்டு மரித்துவிட்டார்.

என் பெற்றோர் அனுபவித்த அடுக்கடுக்கான துக்கங்கள் என் அறிவிற்கு அப்பாற்பட்டவை. அதில் கண்ணீர், இழப்பு, போராட்டம் ஆகியவைகள் தவறாமல் இடம்பெற்றிருந்தது. ஆனால் என் சிறிய மனதின் புரிதலுக்கு அந்த உணர்ச்சிகளையோ, அதின் வெளிப்பாடுகளையோ புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவே நான் முதன்முறையாக…

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத்…

சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: “மீன்பிடிக்கப்போகிறேன்” என்றான். அதற்கு அவர்கள்: “நாங்களும் உம்முடனேகூட வருகிறோம்” என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும்…