மன்னர் நான்காம் கிருஷ்ண ராஜ வாடியார், பொதுவாக இந்தியாவின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் 1902 முதல் 1940 வரை மைசூரை ஆண்டார், மேலும் அவரது துல்லியமான நிர்வாகத்திற்கும், குறிப்பாக அவரது பணியாளர்களிடம் கொண்ட கருணை உள்ளத்திற்கும் பிரபலமானவர். அவர் தனது வேலையாட்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஜன்னல்கள் கடுமையான வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவர் தனது குடிகளிடம் கருணை காட்டும் உண்மையான செயல்கள் மிகவும் புகழ் பெற்றன, அந்த நேரத்தில் மைசூரு உலகின் சிறந்த ஆளுகை கொண்ட மாநிலமாகப் பலரால் பரவலாகக் கருதப்பட்டது.
ஜனங்கள் மீது தாம் காட்டிய கருணைக்காகத் தேவனால் புகழப்பட்ட மற்றொரு மனிதர் கொர்நேலியு ஆவார். நூற்றுக்கு அதிபதியாக, அவரது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர் (வ.1). அவர் அநேகமாகச் செல்வந்தரும், செல்வாக்கு மிக்கவருமாக இருந்திருக்கலாம். இரக்கத்திற்கும் அவரது வேலைக்கும் சம்பந்தம் இல்லை; உண்மையில், அவர் ஒரு ரோம அதிகாரியாக இருந்ததால் அவர் வெறுக்கப்பட்டிருக்கலாம். ஆயினும்கூட, அவர் இரக்கமாக இருப்பதையே தெரிந்துகொண்டார். அவருடைய தேவபயம் கொண்ட சுபாவமும் மற்றும் ஏழைகளுக்கு அவர் அளித்த கொடைகளும் தேவனுக்கு முன்பாக நற்கந்த வாசனையான நினைப்பூட்டுதலாக இருந்தன (வ.4). புறஜாதியாரைக் குறித்த தனது திட்டத்தைத் தேவன் வெளியரங்கமாக்க அவரது வீடே ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. எத்தனை நற்கிரியைகளும் நம்மை கிறிஸ்துவுக்கு பாத்திரவான்களாக்க முடியாது என்றாலும், நம்முடைய நற்கிரியைகள் நிச்சயமாகத் தேவனைப் பிரியப்படுத்தும். நாம் அவரிடம் அனுபவித்த அல்லது பிறரிடம் எதிர்பார்க்கும் அதே இரக்கத்தையும் நன்மையையும் மற்றவர்களுக்குக் காட்டும்போது தேவன் மகிழ்கிறார். உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மாற்கு 12:31) என்று இயேசு கட்டளையிட்டதன் அர்த்தம் இதுவல்லவா? கொர்நேலியுவின் தருமங்களைப் போலவே, பிறருக்கான நமது கருணையும் தேவனுக்கு உகந்த நற்கந்தம் வீசும் பலியாக இருக்கட்டும்.
இயேசுவே, நீர் எனக்குக் காட்டிய முன்மாதிரிக்கு உமக்கு நன்றி, உமது நற்குணத்தை அனைவருக்கும் நான் வெளிக்காட்டட்டும்.
உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. [ அப்போஸ்தலர் 10:4 ]
