இலங்கையின் கிராமங்களைச் சுனாமி அழித்ததையும், ஒரு பெண் பல வருடங்களாக உழைத்து வாங்கிய தையல் இயந்திரம் அழிந்ததையும் அறிந்ததும், மார்கரெட் என்ற அமெரிக்கத் தையற்காரா பெண்மணி உதவ முன்வந்தார். அந்தப் பெண்ணும் அவளைப் போன்ற மற்றவர்களும் தங்கள் தையல்கார தொழிலை இழந்துவிட்டதை உணர்ந்த மார்கரெட், பல தையல் இயந்திரங்களைச் சேகரித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அனுப்பினார். அங்கே அவைகளைக்கொண்டு தைக்க அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். தங்களையும் தங்கள் குடும்பங்களையும் ஆதரிப்பதற்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக்கூடிய திறமையை இது அவர்களுக்கு அளித்தது.
பவுலும் வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார், கூடாரம் கட்டுதல் மூலமாகச் சம்பாதிக்கவும் செய்தார் (அப் 18:3). பவுல் தனது வேலையை ஊழியமாகவே கருதினார்; வெறுமனே பிரசங்க ஊழியத்திற்கு நிதியளிக்கும் ஒரு வழிமுறையாக அல்லாமல் தேவனுக்கு அவர் ஊழியம் செய்த பல வழிகளில் ஒன்றாகவே அதனைக் கருதினார். அவர் “ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும்” தேடவில்லை, ஆனால் “எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது” (20:33-34) என்றார். எபேசுவில் உள்ள சபையின் மூப்பர்களையும் அவ்வாறே செய்யும்படி அவர் வலியுறுத்தினார்; அவர்கள் தங்களுடன் இருக்கும் “பலவீனரைத் தாங்கவும்” (வ. 35) பிரயாசப்பட வேண்டும்.
பவுல் தனது ஊழியத்தையும் வேலையையும் பிரிக்கவில்லை. மாறாக அவர் தனது வாழ்க்கையின் முழு செயல்பாடுகளையும் ஊழியமாகவே பார்த்தார். நமக்காக மட்டுமின்றி பிறரின் நலனுக்காகவும் நம்மிடமுள்ள திறமைகளைக் கொண்டு நாம் உழைக்கும்போது, இயேசுவின் விசுவாசிகளாக இருக்கிறமென்ற நம்முடைய புதிய அடையாளத்திற்குச் சாட்சி பகிர்கிறோம். மேலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அவரை அறிவிக்கிறோம்.
மற்றொருவருக்குள் வசிக்கும் தேவனை நீங்கள் கண்டுகொள்ளும்படியாக அவர்களின் வேலை உங்களுக்கு எவ்வாறு பயனளித்தது? உங்கள் திறமைகள், செயல்பாடுகள் மற்றும் உழைப்புகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம்.
அவருடைய நற்குணத்தை எவ்வாறு பிரதிபலிக்க முடியும்? தேவனே, என்னைத் திறமைகளாலும் திறன்களாலும் படைத்ததற்காக நன்றி. என் வாழ்க்கையில் நீர் செயல்படுவதைப் பிறர் காணும்படியாக அவற்றைப் பயன்படுத்த எனக்கு உதவும்.