மார்க் ஒரு உற்சாகமான இளம் போதகர். ஒரு காலை வேளையில், தனது மகன் ஓவனுடன் பந்து விளையாடுகையில், ஓவன் தடுமாறி விழுந்து மரித்தான். நிலைகுலைந்து போன மார்க், இன்றும் அதற்காக வேதனைப்படுகிறார். ஆனால், அந்த வலியினூடே மிகுந்த மனதுருக்கமுடைய போதகரா க மாறியுள்ளார். மார்க்கின் துயரத்தில் பங்கேற்ற நான், “தேவன் ஒருவனை ஆழமாக காயப்படுத்துமட்டும், அவன் அவரால் அபிரிதமாக ஆசிர்வதிக்கபடுது சந்தேகமே ” என்று ஏ.டபல்யு.டோசர் குறிப்பிட்டிருந்த தனது புரிதலுக்கு, மார்க்கின் சோதனையும் ஒரு சான்றோ என்று வியக்கிறேன்.
ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதல்ல. இஸ்ரவேலர்களின் பயணத்தை கவனித்தால், தேவனின் அறிவதர்கரிய வழிமுறைகளில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். புதிதாய் தோன்றிய தேசத்திற்குத் தேவன், “ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி” (யாத்திராகமம் 13:17) எகிப்திலிருந்து எளிதான பாதையில் அழைத்து வந்தார். எனினும் சில வசனங்கள் தள்ளி, தேவன் மோசேயிடம் பார்வோன் தனது இராணுவத்தோடு இவர்களை பின்தொடரும்படிக்கு பாளயமிறங்க சொன்னார் (14:1-4). பார்வோன் இந்த பொறியில் வீழ்ந்தான். இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (வ.10). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (வ.14) என்று மோசே அவர்களைத் திடப்படுத்தினான்.
தேவன் தமது ஜனங்களை வளர்க்கவும், தமக்கு மகிமையுண்டாக்கவும்; கடினம் மற்றும் எளிதுமான இரண்டு பாதைகளையும் உபயோகிக்கிறார். தேவன், “நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” (வ.4) என்று வாக்குரைத்தார். இஸ்ரவேலர் அவ்வாறே செய்தனர். நாமும் அவ்வாறே செய்யலாம். எளிதோ, கடிதோ ஒவ்வொரு சோதனையினூடே தேவன் நமது விசுவாசத்தைக் கட்டுவிக்கிறார். வாழ்க்கையின் எளிதான காலத்தில், அவரில் இளைப்பாறுங்கள். வாழ்க்கையின் கடினமான நேரத்தில், அவர் உங்களைச் சுமக்கட்டும்.
உங்கள் வளர்ச்சிக்கு, வலியானது எவ்வாறு வித்திட்டது? ஏன் தேவன் கடினம், மற்றும் எளிதுமான இரண்டு சோதனைகளையும் உபயோகிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அன்பு இயேசுவே, அனைத்து சோதனைகளுக்கும் நீர் ஒருவரே போதுமானவர்.