தாங்கள் செய்வது தவறாயினும், மக்கள் தாங்கள் செய்வதே சரியென்று என்று முழுமையாக நம்புவதின் காரணத்தை ஆராய்கையில்; ஆசிரியர் ஜூலியா கேலெஃப், இது நம்மிலிருக்கும் ஒரு “சிப்பாய் மனநிலையுடன்” தொடர்புடையது என்றும், ஆகவே நாம் ஏற்கனவே நம்பும் ஒன்றுக்கு எதிரானவற்றிலிருந்து அதனை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம் என்றும் பரிந்துரைக்கிறார். மாறாக, ஒரு “தேடுகிற மனப்பான்மை” தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேலெஃப் வாதிடுகிறார். இதன்மூலம் ஒருவர் தன் நம்பிக்கைக்கு எதிரானவற்றைப் புறக்கணிப்பதற்கு மாறாக, முழுமையான உண்மையை ஆராய்கிறார். ஆகையால், ஒரு காரியம் உங்களுக்கு ஏற்றதாகவோ, சௌகரியமானதாகவோ அல்லது இனிமையாகவோ இல்லாவிடினும் உள்ளதை உள்ளபடி துல்லியமாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கண்ணோட்டத்தை உடையவர்கள், புரிதலில் தொடர்ந்து வளர்வதற்கேற்ற மனத்தாழ்மையைக் கொண்டுள்ளனர்.

கேலெஃபின் இந்த புரிதல், “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்” (யாக்கோபு 1:19) என்று விசுவாசிகள் ஒரே மாதிரியான மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற யாக்கோபின் ஊக்கத்தை நினைவூட்டுகிறது. அவசரப்பட்டு ஆற்றும் எதிர்வினைகளால் உந்தப்படுவதற்குப் பதிலாக, மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது (வ.20) என்பதை நினைவில் கொள்ளுமாறு இயேசுவின் விசுவாசிகளை யாக்கோபு வலியுறுத்துகிறார். அவருடைய கிருபைக்குத் தாழ்மையுடன் கீழ்ப்படிந்தால் மட்டுமே ஞானத்தில் வளர முடியும் (வ.21; தீத்து 2:11-14 ஐப் பார்க்கவும்).

நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மையல்ல, தேவனுடைய கிருபையையே  சார்ந்தது என்பதை நினைவில் கொள்ளுகையில்,  நாம் செய்வது தான் சரி என்ற மனநிலையை நாம் கைவிட்டுவிடுவோம். மேலும், நாம் எவ்வாறு வாழவேண்டும் என்றும் பிறரிடம் எவ்வாறு உண்மையான கரிசனையோடு இருக்க வேண்டும் என்பதற்கு அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:25-27).