கடின உழைப்பாளியான குமாஸ்தா எரின், எப்போதும் தன் வேலையைச் சிறப்பாகச் செய்தாள். ஆனால் அவர் நேர்மையற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர், எரின் விசாரணையின் போது கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார். எதிர்ப்பை கண்டு, ராஜினாமா செய்யவும் யோசித்தாள், ஆனால் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டாள். “ராஜினாமா செய்தால் நீங்கள் குற்றவாளியாக எண்ணப்படுவீர்கள்” என்று அவளிடம் கூறப்பட்டது. எனவே எரின் தரித்து, தனக்கு நீதி கிடைக்கத் தேவனிடம் ஜெபித்தாள். அதேபோல, சில மாதங்கள் கழித்து, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

பவுல் தன்னை மிஷனரி குழுவிலிருந்து நீக்கியபோது, யோவனென்னும் மாற்கும் இவ்வாறே உணர்ந்திருக்கலாம். உண்மையில், அந்த வாலிபன் அவர்களை முன்னதாக பிரிந்திருந்தான் (அப் 15:37-38). ஆனால், ஒருவேளை அதற்காக அவர் மனம் வருந்தியிருக்கலாம், மேலும் இந்த முறை குழுவில் இணைவதை எதிர்பார்த்திருப்பார். அவர் பவுலால் தவறாக நியாயந்தீர்க்கப்பட்டதாக உணர்ந்திருக்க வேண்டும்; பர்னபா மட்டுமே அவரை நம்பினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அவர், “மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.” (2 தீமோத்தேயு 4:11) என்றார். யோவனென்னும் மாற்கு, தனது நற்பெயர் மீண்டதில் நிம்மதி அடைந்திருக்க வேண்டும்.

நாம் தவறாக நியாயந்தீர்க்கப்படும்போது, ​​நாம் எப்படி உணர்கிறோம் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் பாவம் செய்யவில்லை ஆனால் பாவியென்று தீர்க்கப்பட்டார். அவர் தேவனின் குமாரனாக இருந்தபோதும், ஒரு சாதாரண குற்றவாளியை விட மோசமாக நடத்தப்பட்டார். ஆனால் அவர் தனது பிதாவின் சித்தத்தைத் தொடர்ந்து செய்தார், அவர் நியாயப்படுத்தப்படுவார் மற்றும் நீதிபரரென்று  காட்டப்படுவார் என்பதை அறிந்திருந்தார். நீங்கள் தவறாக  நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், முடங்கிவிடாதீர்கள்; தேவன் அறிவார், அவருடைய நேரத்தில் செயல்படுவார்.