தனது சைகை மொழி திறனை மேம்படுத்த, லீசா காது கேளாதோரோடு நெருங்கிப் பழகினாள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் புரிந்துகொண்டாள். காது கேளாதவர்கள் செவித்திறனுள்ள நபர்களால் மோசமாக ஒதுக்கப்படுகின்றனர், உதடு அசைவுகளை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள், மேலும் பணியிடத்தில் பதவி உயர்வுக்காக வழக்கமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளும் இவர்களுக்கு விளக்கப்படாமலேயே நடக்கின்றன.

செவித்திறனற்றவர்களுடன் இயல்பாக ஒன்றும் அளவிற்கு லீசாவின் செய்கை மொழி சீராக மேம்பட்டது. ஒரு விருந்தின்போது, காது கேளாத நபர் ஒருவர்  லீசாவால் கேட்க முடியும் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். லீசா பதிலளிக்கும் முன், மற்றொரு நண்பர், “அவள் மனதளவில் செவிடு” என்று செய்கை காட்டினார். அவர்களின் உலகில் வாழ லீசாவின் விருப்பமே இங்குக் காரியம்.

காது கேளாதவர்களுடன் பழக லீசா தன்னை “தாழ்த்திக்கொள்ளவில்லை”. அவளுடைய செவிப்புலன் தவிர, அவளும் அவர்களைப் போல ஒருத்தியே. ஆனால், நம் உலகில் வாழும்படிக்கும், நம் அனைவரையும் சந்திக்கும்படிக்கும், இயேசு “கீழே இறங்கி” வந்தார் . அவர் “தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்(தார்)த” (எபிரெயர் 2:9). கிறிஸ்து “மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்” (வ.14) மாம்சமானார். அவ்வாறு செய்வதன் மூலம், “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்” (வ.15). மேலும், அவர் “தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு” (வ.17) முழுமனிதரானார்.

நாம் எதனை எதிர்கொண்டாலும், இயேசு அதை அறிகிறார், புரிகிறார். அவர் நம் இதயகுரலை கேட்கிறார். எல்லா வகையிலும் நம்முடன் இருக்கிறார்.