கென்னி, கடவுள் நம்பிக்கை இழந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் விட்டுச் சென்ற சபையின் முன் நின்றார். அவர் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கப்பட்டதாகப் பகிர்ந்து கொண்டார். எப்படி? சிருஷ்டிப்பில் அவர் பார்த்த அழகு மற்றும் வடிவமைப்பு மூலம் தேவன் அவரது உள்ளத்தில் பேசியிருந்தார். இயற்கை உலகில் காணப்பட்ட தேவனின் பொதுவான வெளிப்பாட்டின் சாட்சியின் மூலம் கென்னி மீண்டும் ஒருமுறை தேவனைக் குறித்துப் பிரமித்தார், மேலும் அவர் இப்போது வேதத்தில் பிரேத்யேகமாக வெளிப்பட்டிருக்கும் தேவ ஞானத்தை ஏற்றுக்கொண்டார். அவரது கதையைப் பகிர்ந்து கொண்ட பிறகு, கென்னி சபையின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரது தந்தை, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, இயேசுவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
யோபு, வாழ்க்கையில் நிறைய இழந்த பிறகு, யோபுவின் விசுவாசமும் அசைந்தது. அவர் கூறினார், “உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.” (யோபு 30:20). தேவன் “பெருங்காற்றிலிருந்து யோபுக்கு” (38:1) பதிலளித்தார், அவர் யோபுவை பாராமல் இல்லையென்றும் மாறாகத் தேவனின் அற்புதமான, கருக்கலான சிருஷ்டிப்பைக் கருத்தில் கொள்ள யோபுவின் பார்வைதான் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். “பூமியின் அஸ்திவாரம்” மற்றும் “விடியற்காலத்து நட்சத்திரங்கள்” (வ. 4, 7) மற்றும் இடையில் காணப்படும் அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் நீர் (வவ. 8-41), என்று அனைத்தும் யோபு நம்பக்கூடிய ஒருவரைச் சுட்டிக்காட்டியது, ஆச்சரியமான அன்பும் வல்லமையும் கொண்ட தேவனே அவர். யோபு பதிலாக, “என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” (42:5) என்றார்.
சந்தேகங்கள் கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை அச்சுறுத்தும் போது, தேவனின் சிருஷ்டியின் மகத்துவத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். நாம் பார்ப்பதற்கு மனமிருந்தால், அவர் அதில் தன்னை வெளிப்படுத்துகிறார்.
தேவன் எவ்வாறு சிருஷ்டியில் தன்னை வெளிப்படுத்தினார்? தேவனைக் குறித்த பிரமிப்பும் அவர் மீதான நம்பிக்கையும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளன?
சிருஷ்டி கர்த்தாவே, சிருஷ்டிப்பில் உம்மை காண எனக்கு உதவியதற்காக உமக்கு நன்றி.