பிலிப்ஸ் ப்ரூக்ஸ், பெத்லகேமுக்குச் சென்ற பிறகு, பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலான, “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லஹேம்” என்பதின் வரிகளை எழுதினார். அமெரிக்காவில் உள்ள ஒரு சபையின் போதகரான ப்ரூக்ஸ், அவருடைய அனுபவத்தால் மிகவும் நெகிழ்ந்து, தனது ஞாயிறு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எனக்கு நினைவிருக்கிறது.. கிறிஸ்துமஸுக்கு முந்தின இரவு, பெத்லகேமின் பழைய தேவாலயத்தில், இயேசு பிறந்த இடத்திற்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது, மணிக்குமணி ​​​​சபை முழுவதும் தேவனைத் துதிக்கும் அற்புதமான பாடல்களால் ஒலித்துக்கொண்டிருந்தபோது, ​​மீண்டும் மீண்டுமாக இரட்சகர்  பிறப்பின் ‘அற்புதமான இரவை’ பற்றி ஒருவருக்கொருவர் சொன்னதை, எனக்கு நன்கு தெரிந்த குரல்களைப் போல என்னால் கேட்க முடிந்தது”

1868 ஆம் ஆண்டில், ப்ரூக்ஸ் தனது சிந்தனைகளை ஒரு கவிதையாக வடித்தார், அவருடைய சபையின் இசைக்குழு அமைப்பாளர் அதற்கு இசை அமைத்தார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகும் தணியாத தாக்கத்தினூடே அமைதியையும் சமாதானத்தையும் இந்தப் பாடல் அறிவித்தது: “பெத்லகேமென்னும் சிறிய நகரமே, நீ அமைதலாய் உறங்குவதை நாங்கள் காண்கிறோம் . . இத்தனை காலத்தின் நம்பிக்கையும், அச்சங்களும் இன்றிரவு உன்னில் சந்திக்கிறது”

மத்தேயு 2 இல், நமது இரட்சகர் பெத்லகேமில் பிறந்ததைப் பற்றி மத்தேயு எழுதினார். ” கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (வ. 1) பெத்லகேமுக்கு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது (மீகா 5:2 ஐப் பார்க்கவும்), இயேசுவைக் கண்டு, “மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்” (மத்தேயு 2: 10)

இன்று, நாம் இயேசுநாதரின் திருவருள் தோற்றத்தைக் கொண்டாடுகையில், நம் இரட்சகரின் பிறப்பு பற்றிய மகிமையான செய்தி நமக்கும் தேவை. பாடல் நமக்கு நினைவூட்டுவது போல, அவர் “நம்முடைய பாவங்களைத் துரத்திவிட்டு உள்ளே பிரவேசிக்கவும்” மற்றும் “நம்மில் பிறக்கவும்” வந்தார். அவரில் நாம் சமாதானம் காண்கிறோம்.