“லாரா புயல்” மெக்சிகோ வளைகுடா வழியாக அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நோக்கி வீசியதால், தீவிர எச்சரிக்கை விடப்பட்டது. மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசுவதை ஒரு ஷெரிப் குறிப்பிட்டு, இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டார்: “தயவுசெய்து வெளியேறுங்கள். ஆனால் நீங்கள் இங்கேயே இருந்தால், எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள எண் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரை எழுதி பத்திரமாக உங்கள் சட்டைப் பையில் வைக்கவும். அது இங்கே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். லாரா புயல் நிலத்தைத் தாக்கியவுடன், அதின் அழிவுகரமான விளைவை அவர்களால் பார்க்க மட்டுமே முடியும் என்று மீட்புக் குழுவினருக்குத் தெரியும். அதன் வீரியத்திற்குமுன் உதவியற்றவர்களாய் இருப்பர்.
பழைய ஏற்பாட்டிலிருந்த தேவஜனங்கள் இயற்கையான அல்லது ஆவிக்குரிய பேரழிவை எதிர்கொண்ட போதெல்லாம், அவருடைய வார்த்தைகள் மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன, அழிவின் மத்தியிலும் அவருடைய பிரசன்னத்தை வாக்களித்தன. “அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து.. அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்” (ஏசாயா 51:3) என்றார். மேலும், தேவன் எப்பொழுதும் தம்முடைய மக்களுக்கு மீட்பையும் குணமாகுதலையும் உறுதியளித்தார். அவர்கள் அவரை மட்டுமே நம்பும்போதே அது அவர்களை நிச்சயமாகப் பின்தொடரும். “வானம் புகையைப்போல் ஒழிந்துபோம்” என்றாலும், தேவன் கூறினார் அவருடைய “இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்” (வ. 6) என்று. பாதிப்பு எப்படிப்பட்டதாயினும், அவர்களுக்கான அவரது உறுதியான நன்மை ஒருபோதும் தடைப்படாது.
தேவன் நம்மைக் கஷ்டங்களுக்கு விலக்குவதில்லை, ஆனால் அவருடைய சீர்பொருத்தும் குணமாக்குதலானது, பேரழிவிற்கு மேம்பட்டது என்று அவர் வாக்களிக்கிறார்.
வாழ்வில் நீங்கள் எங்கே பாழாவதையும், பேரழிவையும் எதிர்கொள்ளுகிறீர்கள்? பாழானவற்றைக் குணப்படுத்தி, மீண்டும் கட்டியெழுப்ப உங்களோடு இருப்பதற்கேதுவான தேவனின் வாக்குத்தத்தத்தை நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள்?
அன்பு தேவனே, பாழானவை மிகவும் அழிவுகரமானவை. அதற்கேற்ற உன்னதமான வாக்குத்தத்தம் உம்மிடம் உள்ளதை என்னால் நம்பக் கூடுமென்று எண்ணவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பதையே தெரிந்துகொள்ளுகிறேன்.