கேட் ஹான்கியை அதிகமானோர் அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர் ஒரு வியத்தகு பெண்மணி. ஆசிரியர், சுவிசேஷகர், பள்ளி ஒருங்கிணைப்பாளர், அருட்பணியாளர் மற்றும் கவிஞராக அவர் 1800களில், இங்கிலாந்தில் உண்மையாக இயேசுவுக்கு ஊழியம் செய்தார். 1867 ஆம் ஆண்டில், கேட் கடும் நோயால் வாதிக்கப்பட்டார். அவர் தேறுகையில், “தி ஸ்டோரி வாண்டட்” மற்றும் “தி ஸ்டோரி டோல்ட்” என இரு பகுதிகளாக ஒரு நீண்ட கவிதையை எழுதினார். அது, இயேசுவுடனும் அவரது வாழ்க்கை சம்பவங்களுடனும் அவளுக்கிருந்த உறவை நெருக்கமான முறையில் வெளிக்காட்டுகிறது.

எல்லா வசனங்களும் இயேசுவையே சுட்டிக்காட்டி, அவருடைய கதையையே சொல்கின்றன. யோவான் தனது நிருபத்தை ஆரம்பிக்கையில், தாங்கள் எவ்வாறு தனிப்பட்ட முறையில் இயேசுவை அனுபவித்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்: “எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற.. உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:1). அவருடனான எங்கள் அனுபவத்தின் காரணமாகவே நாங்கள் இயேசுவின் கதையைச் சொல்கிறோம் என்று அப்போஸ்தலன் எழுதுகிறார்: “அந்த ஜீவன் வெளிப்பட்டது.. அந்த ஜீவனை நாங்கள் கண்டு..உங்களுக்கு அறிவிக்கிறோம்” (வ.2). பின்னர், யோவான் நம்மைக் கவரும் ஒரு கருத்தைக் கூறுகிறார்: “தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிற(து)தினாலும்” (2:14). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் கதை நம்முடைய கதை. அவருடனான நமது சொந்த அனுபவத்தின் வெளிச்சத்தில் கிறிஸ்துவின் கதையைச் சொல்ல நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.

இதைத்தான் கேட் ஹான்கி தனது கவிதையில் செய்தார். இறுதியில், அவரது கவிதையின் இரண்டு பகுதிகளும் இந்த பிரியமான பாடல்களாக மாறியது: “ஐ லவ் டூ டெல் மை ஸ்டோரி” மற்றும் “டெல் மீ தி ஓல்ட், ஓல்ட் ஸ்டோரி”. ஒருவேளை, கேட் போல நாமும் நம்முடைய சொந்த வார்த்தைகளில், தனித்துவமான வழிமுறையில் இயேசு நம்மை நேசித்து, நம்மிடம் வந்து, நம்மை மீட்ட கதையைப் பிறருடன் பகிரலாம்.