மரண தருவாயிலிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் இலக்கண அறிஞர் டொமினிக் பௌஹர்ஸின் படுக்கையைச் சுற்றி, அவர் குடும்பம் கூடியிருந்தது. அவர் இறுதியாக சுவாசித்து கொண்டிருக்கையில், “நான் சாகப்போகிறேன் அல்லது நான் மரிக்க போகிறேன்; இரண்டு வாக்கியங்களுமே சரியானது” என்றாராம். மரணப் படுக்கையில் இலக்கணத்தைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? வாழ்நாள் முழுவதும் இலக்கணத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம்.

நாம் முதுமையை அடையும் நேரத்தில், நாம் பெரும்பாலும் நம் விருப்பங்களில் வாழ்ந்திருப்போம். நல்லதோ கெட்டதோ, நமது விருப்பங்கள் பழக்கங்களாக உருமாறி, பின்னர் குணாதிசயமாக வடிவெடுக்கும் நீண்ட ஆயுட்காலம் நமக்கு இருந்தது. நாம் எப்படிப்பட்டவர்களாக வேண்டுமென்று தெரிவு செய்தோமோ, அப்படியே ஆனோம்

நம் குணம் இளமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கும்போது பக்திவிருத்திக் கேதுவான பழக்கங்களை வளர்ப்பது எளிது. “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5-7) என்று பேதுரு வலியுறுத்துகிறார். இந்த நற்பண்புகளை நடைமுறைப்படுத்துங்கள், மேலும் “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்” (வ.11).

பேதுருவின் பட்டியலில் உள்ள எந்த குணாதிசயங்கள் உங்களில் அதிகமாக உள்ளன? எந்த குணங்களுக்கு இன்னும் கவனம் தேவை? நாம் யாராகிவிட்டோம் என்பதை நாம் உண்மையில் மாற்ற முடியாது, ஆனால் இயேசுவால் முடியும். உங்களை மாற்றவும், பெலப்படுத்தவும் அவரிடம் கேளுங்கள். இது மெதுவான, கடினமான பயணமாக இருக்கலாம், ஆனால் நமக்குத் தேவையானதைச் சரியாக வழங்குவதில் இயேசு நிபுணர். உங்கள் குணத்தை மாற்றும்படி அவரிடம் கேளுங்கள், அதனால் நீங்கள் மேலும் மேலும் அவரைப் போல் ஆகுவீர்கள்.