மறைந்த எனது தாயாரின் வீட்டை விற்கவா? என் அன்பான, விதவை தாயார் இறந்த பிறகு, அந்த முடிவு என் இதயத்தை பாரமாக்கியது. பாச உணர்வு, என் உணர்வுகளை ஆண்டது. இருப்பினும், நானும் என் சகோதரியும் இரண்டு வருடங்களாக அவரது காலி வீட்டைச் சுத்தம் செய்து, பழுது பார்த்தோம். அதை விற்பனைக்கேற்றதாக மாற்றினோம். இது 2008 இல் நடந்தது, மேலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் விலையைக் குறைத்துக்கொண்டே இருந்தோம் ஆனால் விற்பனையாகவில்லை. பிறகு, ஒரு நாள் காலையில் என் வேதாகமத்தைப் படிக்கும் போது, ​​இந்தப் பகுதி என் கண்ணில் பட்டது: “எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு” (நீதிமொழிகள் 14:4).

இந்த நீதிமொழி, விவசாயத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் அதன் செய்தியில் நான் பேராவல் கொண்டேன். ஒரு ஆளில்லாத தொழுவம் சுத்தமாக இருக்கும், ஆனால் குடியிருப்போரின் “ஜனசடுதி ” இருந்தால் மட்டுமே அது பயிர் அறுவடை இருக்கும். எங்களுக்கோ அந்த அறுவடை லாபம் மற்றும் குடும்ப மரபாக இருக்க வேண்டும். என் சகோதரியை அழைத்து, “அம்மா வீட்டை நாமே வைத்துக் கொண்டால் என்ன? நாம் அதை வாடகைக்கு விடலாம்” என்றேன்.

இந்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. அம்மாவின் வீட்டை முதலீடாக மாற்றும் திட்டம் எங்களிடம் இல்லை. ஆனால் வேதாகமம், ஆவிக்குரிய வழிகாட்டியாக மட்டுமின்றி, நடைமுறைக்கேற்ற ஞானத்தையும் வழங்குகிறது. தாவீது ஜெபித்தபடி, “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 25:4).

எங்கள் விருப்பப்படி, நனையும் என் சகோதரியும் பல அன்பான குடும்பங்களுக்கு அம்மாவின் வீட்டை வாடகைக்கு விடும் பாக்கியம் பெற்றோம். மேலும் வேதம் நம் தீர்மானங்களை முடிவெடுக்க உதவுகிறது என்ற வாழ்வை மாற்றும் இந்த சத்தியத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:105) என்று சங்கீதக்காரன் எழுதினான். நாம் தேவனுடைய வெளிச்சத்தில் நடப்போமாக.