பவுல் யூதர்களின் சுத்திகரிப்பு முறைமைக்காக ஆலயத்திற்குச் சென்றிருந்தார் (அப் 21:26). ஆனால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் போதிப்பதாகக் கருதிய சில கிளர்ச்சியாளர்கள், அவரை கொல்ல முயன்றனர் (வ.31). ரோமானிய வீரர்கள் விரைந்து தலையிட்டு, பவுலைக் கைது செய்து, அவரைக் கட்டி, ஆலய பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்; “இவனை அகற்றும்” (வ.36) என்று அந்தக் கும்பல் கூச்சலிட்டது.
இந்த அச்சுறுத்தலுக்கு அப்போஸ்தலன் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? படைகளின் தளபதியிடம், “ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று” என்று கேட்டார் (வ. 39). ரோமானியத் தலைவர் அனுமதி அளித்தபோது; பவுல், இரத்தம் ஒழுக காயத்துடன், கோபமான கூட்டத்தினரிடம் திரும்பி, இயேசுவின் மீதான தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார் (22:1-16).
இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பழைய வேதாகம கதையோடு நம்மைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே கடினமாக இருக்கும். மிகச் சமீபத்தில், விசுவாசிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் ஒரு நாட்டில், சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் விசுவாசியான ஒரு நண்பரைப் பார்க்கச் சென்ற பீட்டர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பீட்டர் ஒரு இருண்ட சிறை அறையில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் விசாரணையின் போது கண்கள் கட்டப்பட்டிருந்தார். கண்கட்டை அவிழ்த்தபோது, நான்கு வீரர்கள் துப்பாக்கியுடன் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டார். பீட்டரின் மறுமொழி? அவர் அதை “அவரது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சரியான வாய்ப்பு” என்று கண்டார்.
கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்காக நீங்களோ அல்லது நீங்கள் அறிந்தவரோ எவ்வாறு துன்புறுத்தலை எதிர்கொண்டீர்கள்? இன்று நீங்கள் எப்படி "சுவிசேஷத்தை அறிவிப்பீர்கள்"?
அன்பு இயேசுவே, அன்புடனும் ஞானத்துடனும் உம்மை பிரதிநிதித்துவப்படுத்த எனக்குத் தைரியம் தாரும்.