லண்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரர், பெரிய பந்தயத்தில் தனியாக ஓடக்கூடாது என்பது ஏன் இன்றியமையாதது என்பதை அனுபவித்தார். பல மாதங்கள் கடினமான ஆயத்தங்களுக்குப் பிறகு, அவர் வலுவான இடத்தில் முடிக்க விரும்பினார். ஆனால் அவர் இறுதி கோட்டை நோக்கித் தடுமாறியபோது, இருமடங்கு சோர்வுடன் சரிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்தார். அவர் தரையில் விழுவதற்கு முன், இரண்டு சக வீரர்கள் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர்; ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலதுபுறமும் நின்று, போராடும் ஓட்டப்பந்தய வீரருக்கு ஓட்டத்தை முடிக்க உதவினார்கள்.
அந்த ஓட்டப்பந்தய வீரரைப் போலவே, பிரசங்கியின் எழுத்தாளரும், பிறர் நம்முடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதால் ஏற்படும் பல முக்கியமான நன்மைகளை நமக்கு நினைவூட்டுகிறார். சாலொமோன், “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” (பிரசங்கி 4:9) என்ற கொள்கையை முன்வைத்தார். கூட்டு முயற்சிகள் மற்றும் பரஸ்பர உழைப்பின் நன்மைகளை அவர் முக்கியத்துவப்படுத்தினார். கூட்டாண்மையில், “அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்” (வ. 9) என்றும், கடினமான காலங்களில் “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (வ.10) என்றும் அவர் எழுதினார். இருண்ட மற்றும் குளிரான இரவுகளில், நண்பர்களின் அரவணைப்பில் “சூடுண்டாகும்” (வ.11). மேலும் ஆபத்தின் போது, ”ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்” (வ. 12). யாருடைய வாழ்க்கை ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதோ, அவர்களால் பெரும் வலிமையைப் பெற முடியும்.
நம்முடைய எல்லா குறைகள் மற்றும் பலவீனங்களுடன், இயேசுவை விசுவாசிக்கிற குழுவின் வலுவான ஆதரவும் பாதுகாப்பும் நமக்குத் தேவை. அவர் நம்மை வழிநடத்திச் செல்லுகையில், நாம் ஒன்றாக முன்னேறுவோமாக.
வாழ்க்கையின் ஓட்டப்பந்தயத்தில் இயேசுவின் மற்ற விசுவாசிகளுடனான தோழமை ஏன் மிகவும் முக்கியமானது? அவரில் உங்கள் குழுவின் தரத்தை நீங்கள் எவ்வாறு மேம்படுத்தக் கூடும்?
அன்பு தேவனே, கிறிஸ்துவில் ஆரோக்கியமான குழுவை உருவாக்க எனக்கு உதவும்.