நிர்மல், உடற்பயிற்சி கூடத்தில் தவறாமல் பயிற்சி செய்வான். அது அவன் உடலில் வெளிப்படையாகத் தெரியும். அவனுடைய அகன்ற தோள்கள், புடைத்த தசைகள், மேலும் அவனது மேற்கைச் சுற்றளவு என் தொடைகளின் அளவாக இருக்கும். அவனது இந்த கட்டழகே, அவனோடு தேவனைக் குறித்துப் பேச, என்னைத் தூண்டியது. உடல் தகுதிக்கான அவனது அதே அர்ப்பணிப்பு, தேவனுடனான ஆரோக்கியமான உறவிலும் வெளிப்படுகிறதா என்று நான் அவனிடம் கேட்டேன். நாங்கள் மிகவும் ஆழமாகப் பேசவில்லை என்றாலும், நிர்மல் “தன் வாழ்க்கையில் தேவன் இருப்பதை” ஒப்புக்கொண்டார். நானூறு பவுண்டு எடையுள்ள, பொருத்தமற்ற, ஆரோக்கியமற்ற உருவத்திலிருந்த அவனது பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பிக்கும் அளவுக்கு நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவனது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம், உடல் ரீதியாக ஆச்சரியமானவற்றைச் செய்திருந்தது.

1 தீமோத்தேயு 4:6-10 இல், உடல் மற்றும் ஆவிக்குரிய பயிற்சி மீது நம் கவனத்தை திரும்புகிறது. “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” (வ. 7-8). ஒருவருடைய வெளிப்புறத் தகுதி, தேவனுடனான நமது நிலையை மாற்றாது. நமது ஆவிக்குரிய தகுதி, உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். இது இயேசுவை நம்புவதற்கான தீர்மானத்தோடு தொடங்குகிறது, அவர் மூலமே நாம் மன்னிப்பைப் பெறுகிறோம். அந்த புள்ளியிலிருந்தே, தேவபக்தியான வாழ்க்கைக்கான பயிற்சி தொடங்குகிறது. இதில், “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும்..  நற்போதகத்திலும்” (வ. 6) தேறி வருதல் மற்றும் தேவனுடைய பெலத்தால், நம் பரலோகத் தகப்பனைக் கனம் பண்ணுகிற வாழ்க்கையை வாழ்தல் ஆகியன அடங்கும்.