வீடு தேடி உணவு வழங்கும் தனது வேலையினிமித்தம் சுவாதி, சுதாகரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, உணவுப் பையிலிருந்த முடிச்சை அவிழ்க்க அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், ஆகவே முடிச்சை அவிழ்க்கும் திறன் அவரிடம் இல்லை. சுவாதி மகிழ்ச்சியுடன் கடமையைச் செய்தாள். சுவாதி அந்த நாள் முழுவதும் சுதாகரை பற்றி அடிக்கடி நினைவு கொண்டாள், மேலும் அவருக்குத் தேவையான சில அத்தியாவசியங்களைச் சேகரிக்க அவள் தூண்டப்பட்டாள். ஊக்கமளிக்கும் குறிப்புடன் சுவாதி, தனது வீட்டு வாசலில் விட்டுச் சென்ற சூடான தேநீரையும் மற்றும் சிவப்பு போர்வையைக் கண்டபோது, சுதாகர் கண்ணீர் விட்டார்.
சுவாதியின் வேலையானது அன்று அவள் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இஸ்ரவேலர்கள், “பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்” (1 சாமுவேல் 17:2), தனது சகோதரர்களுக்கு உணவு வழங்க ஈசாய் தனது இளைய மகன் தாவீதை அனுப்பியபோதும் இது போலவே நடந்தது. தாவீது அப்பம் மற்றும் பாலாடைக்கட்டியுடன் வந்தபோது, கோலியாத் தனது அனுதின கேலியால் தேவஜனங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதை அறிந்தார் (வ.8-10,16,24). “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை” (வ.26) கோலியாத் நிந்திப்பதைக் கண்டு தாவீது கோபமடைந்தார், மேலும் சவுல் ராஜாவிடம், “இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன்” (வ.32) என்று சொல்லி எதிர்வினையாற்ற உந்தப்பட்டார்.
தேவன் சில சமயங்களில் நம் அன்றாட வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, அவர் நம்மைப் பயன்படுத்த விரும்பும் இடங்களில் நம்மை வைக்கிறார். நாம் ஒருவருக்கு எங்கு, எப்படி சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவார் என்பதைப் பார்க்க நம் கண்களை (மற்றும் இதயங்களையும்!) திறந்து வைத்திருப்போமாக.
தேவன் உங்கள் தேவைகளில் வேறொருவர் மூலம் எப்போது வழங்கினார்? இன்றைக்கு அவர் உங்களை இன்னொருவரின் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்த விரும்புவார்?
தகப்பனே, நீர் இன்று என்னை எங்கே பயன்படுத்துவீர் என்பதனை பார்க்க, தயவாய் என் கண்களைத் திறந்தருளும்.