சந்துரு, கிறிஸ்துவை நம்பும் குடும்பத்தில் தான் வளர்ந்தான். ஆனால், கல்லூரி மாணவராகக் குடிப்பழக்கம் மற்றும் கேளிக்கை போன்றவற்றால் தனது சிறுபிராய நம்பிக்கையிலிருந்து வழிதவற ஆரம்பித்தான். பின்னர், ” தகுதியற்றிருந்த என்னை, தேவன் மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்” என்றான். காலப்போக்கில், சந்துரு ஒரு கோடைக்காலத்தில்  முக்கிய நகரங்களின் தெருக்களில் அறிமுகமற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்துகொண்டான். தற்போது, அவனுடைய சபையில் வாலிபர் ஊழியத்தைக் குறித்த பயிற்சி படிப்பை முடித்தான். கிறிஸ்துவுக்காக வாழாமல் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க இளைஞர்களுக்கு உதவுவதே சந்துருவின் குறிக்கோள்.

சந்துருவைப் போலவே, இஸ்ரவேலின் தலைவரான மோசேக்கும் அடுத்த தலைமுறை குறித்த கரிசனை இருந்தது. தான் விரைவில் தலைமையைத் அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த மோசே, தேவனின் நல்ல ஒழுங்குமுறைகளை ஜனங்களுக்கு வழங்கினார். பின்னர் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் பலன்களையும் பட்டியலிட்டார். கீழ்ப்படிதலுக்கு,  ஆசீர்வாதம் மற்றும் ஜீவன்; கீழ்ப்படியாமைக்கு, சாபம் மற்றும் மரணம். அவர் அவர்களிடம், “ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு” என்றார். “அவரே உனக்கு ஜீவனும்” (உபாகமம் 30:19-20) என்றார். தேவனை நேசிக்கவும், “அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக” (வ. 20) என்றும் அவர்களை மோசே வலியுறுத்தினார். 

பாவத்தைத் தேர்ந்தெடுப்பது பின்விளைவுகளை உண்டாக்கும். ஆனால் நாம் நம் வாழ்க்கையை மீண்டும் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவார் (வ. 2-3) மற்றும் நம்மை மீட்டெடுப்பார் (வ. 4). இந்த வாக்குத்தத்தம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் முழுவதும் நிறைவேற்றப்பட்டது, ஆனால் இயேசு சிலுவையில் செய்த இறுதியான கிரியை மூலம் நம்மையும் தேவனோடு ஐக்கியப்படுத்தியது. நமக்கும் இன்று நமக்கு முன் இந்த தெரிவுதெடுப்பு வைக்கப்பட்டுள்ளது, ஜீவனைத் தேர்ந்தெடுக்க நமக்கு சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது.