இரண்டு நண்பர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் மடிக்கணினி வாங்கச் சென்றபோது, ​​அவர்கள் கூடைப்பந்து ஜாம்பவான் ஷாகில் ஓ’நீலை சந்தித்தனர். ஓ’நீல், சமீபத்தில்தான் தனது சகோதரி மற்றும் தனது முன்னாள் சக வீரரின் இழப்பை அனுபவித்தார் என்பதை அறிந்திருந்த அவர்கள், பரிவுணர்வோடு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். பின்னர் இருவரும் கடைக்குத் திரும்பிய பிறகு, ஷக் அவர்களை அணுகி, அவர்களுக்கான சிறந்த மடிக்கணினியைத் தெரிவு செய்யும்படி சொன்னார். பின்னர் அவர் அதை அவர்களுக்காக வாங்கினார், ஏனெனில் அவர்கள் அவரை ஒரு கடினமான நேரத்தைக் கடக்கும் ஒரு நபராகப் பார்த்ததினால், அவர்களின் இரக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

அந்த சந்திப்பிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சாலொமோன், “தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்” (நீதிமொழிகள் 11:17) என எழுதினார். பிறரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது, ​​நாமும் பலனடைகிறோம். இது வெறும்  மடிக்கணினியோ  அல்லது மற்ற பொருட்கள் பற்றினதோ மட்டுமல்ல, ஆனால் இந்த உலகம் அளவிட முடியாதபடி தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளார், “நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்” (வ.16) என்று சாலொமோன் அதே அத்தியாயத்தில் முன்பு ஒரு வசனத்தை விளக்கியது போல். தேவனிடம் பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள பரிசுகள் உள்ளன, மேலும் அவர் தனது பரிபூரண ஞானத்திலும் வழிமுறைகளில் அவற்றைத் தாராளமாக அளந்து பகிர்கிறார்.

இரக்கமும் பெருந்தன்மையும் தேவனின் சுபாவத்தை ஒரு பகுதியாகும், ஆகவே அவை நம் சொந்த உள்ளங்களிலும் வாழ்க்கையிலும் வெளிப்படுவதைக் காண அவர் விரும்புகிறார். சாலொமோன் இந்த காரியத்தை இரத்தின சுருக்கமாக : “எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வ. 25) என்றார்.