வேறொரு நாடு செல்ல, தனது திட்டமிடப்பட்ட பயணத்தை விமலா எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், வழக்கம் போல் அவள் முதலில் அதற்காக ஜெபித்தாள். “இது ஒரு விடுமுறை பயணம்தானே, இதற்காக ஏன் நீ தேவனிடம் ஆலோசிக்க வேண்டும்?” என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார்.  இருப்பினும், விமலா எல்லாவற்றையும் தேவனிடம் அர்ப்பணிப்பதை விசுவாசித்தாள். இம்முறை, பயணத்தை ரத்து செய்யுமாறு அவர் ஏவுவதை அவள் உணர்ந்தாள். அப்படியே செய்தாள். அவள் அங்கே இருக்க வேண்டிய நேரத்தில், அந்த நாட்டில் ஒரு பெருந்தொற்று பரவியதைப் பின்னரே அறிந்தாள். “தேவனே என்னைப் பாதுகாப்பதை உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டாள்.

வெள்ளம் வடிந்த பிறகு, நோவாவும் அவருடைய குடும்பமும் பேழையில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காத்திருக்கையில்  தேவனின் பாதுகாப்பை அவர் நம்பியிருந்தார். பத்து மாதங்களுக்கும் மேலாக ஒத்துழைத்த பிறகு, அவர் வெளியேற ஆர்வமாக இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ” பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று” மற்றும் ” பூமி காய்ந்திருந்தது” (ஆதியாகமம் 8:13-14). ஆனால், நோவா தான் பார்த்ததை மட்டும் நம்பவில்லை; மாறாக, தேவன் அவரிடம் சொன்னபோதுதான் அவர் பேழையை விட்டு வெளியேறினார் (வ.15-19). நீண்ட காத்திருப்புக்குத் தேவனிடம் நல்ல காரணம் இருப்பதாக அவர் நம்பினார்; ஒருவேளை பூமி இன்னும் முற்றிலும் ஏற்றதாயில்லாமல் இருந்திருக்கலாம்.

நம் வாழ்வின் தீர்மானங்களைக் குறித்து நாம் ஜெபிக்கையில், ​​நமக்குத் தேவன் அளித்த மனத்திறனை பயன்படுத்தி, அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும்போது; ​​நம்முடைய ஞானமான சிருஷ்டிகர்  நமக்கு எது சிறந்தது என்பதை அறிவார் என்று அவருடைய நேரத்தை நம்பலாம். சங்கீதக்காரன் கூற்றுப்படி, “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்..என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்கீதம் 31:14-15).