எங்கள் பேரக்குழந்தைகள் நான்கு பெரும் ஒரு ரயில் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர், இளைய இருவருக்கும் அதின் உந்து பொறியைக் குறித்து வாக்குவாதம் உண்டானது. எங்கள் எட்டு வயது பேரன் தலையிடுகையில், ​​அவனுடைய ஆறு வயது சகோதரி, “அவர்களுடைய காரியத்தில் தலையிடாதே” என்றாள். இது பொதுவாகவே நம் அனைவருக்குமான ஞானமான வார்த்தைகள். ஆனால் வாக்குவாதம் அழுகையாக மாறியபோது, ​​​​பாட்டி தலையிட்டு, பிரித்து, சண்டையிடும் குழந்தைகளை ஆறுதல்படுத்தினார்.

பிறர் காரியங்களில் தலையிடுவது விஷயங்களை மோசமாக்கும் என்றால், விலகி இருப்பதே நல்லது. ஆனால் சில நேரங்களில் நாம் ஜெபத்தோடு தலையிட வேண்டும். பிலிப்பியருக்குக்கான நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல்,  அதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணத்தை அளிக்கிறார். இங்கே அவர் இரண்டு பெண்களான எயோதியா மற்றும்  சிந்திகேயாவை, “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க” (4:2) வலியுறுத்துகிறார். வெளிப்படையாக, அவர்களின் கருத்து வேறுபாடு மிகவும் தீவிரமடைந்தது, அப்போஸ்தலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் (1:7) தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார் (வ.3).

பெண்களின் வாதம் பிரிவினை உண்டாக்குவதையும், சுவிசேஷத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதையும் பவுல் அறிந்திருந்தார். எனவே, அவர்களின் பெயர்கள் “ஜீவபுஸ்தகத்தில்” (4:3) எழுதப்பட்டிருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுகையில் அவர் கண்ணியமாக இந்த சத்தியத்தை உரைத்தார். இந்தப் பெண்களும், சபையில் உள்ள அனைவரும் சிந்தையிலும், செயல்களிலும் தேவனின் ஜனங்களாக வாழ வேண்டும் என்று பவுல் விரும்பினார் (வ.4-9).

நீங்கள் தலையிட வேண்டுமா என்று உங்களுக்கு நிச்சயமில்லாவிடில், ​​”சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்”  (வ. 9; பார்க்க வ. 7) என்பதை நம்பி ஜெபியுங்கள்.