ஒளிப்பதிவு? சிறப்பாக இருந்தது. தோற்றம்? நம்பக்கூடியது. கருத்து? சுவாரஸ்யமானதும், தொடர்புள்ளதுமானது. பாலிவுட் நடிகரான அமீர் கான், வழக்கத்திற்கு மாறான அரசியல் ரீதியான அறிக்கைகளை வெளியிடும் காணொளியாக அது இருந்தது. இணையத்தில் பலர் இது உண்மை என்று நம்பினர், மேலும் இது நடிகரின் புதிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும் எண்ணினர்.
ஆனால் இந்த பிரபலமான காணொளி போலியானது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி நடிகரின் போலியான ஆள்மாறாட்டம் ஆகும், மேலும் இது கலகத்தை உருவாக்கும் சுயநல நோக்கோடு புனையப்பட்டது. உண்மையில் அந்த அறிக்கைகளை நடிகர் வெளியிடவில்லை, மேலும் காணொளியானது அதிக பரபரப்பானது போலவே, அது பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
நமது தொழில்நுட்பங்களின் காரணமாக, பொய்கள் பெரிதாக்கப்பட்டு, அவை உண்மை என்று நம்மை நம்ப வைக்கும் அளவுக்குப் பெருகிக்கொண்டிருக்கும் யுகத்தில் நாம் வாழ்கிறோம். தெய்வீக ஞானத்தின் தொகுப்பான நீதிமொழிகள் என்ற புத்தகம், உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள அப்பட்டமான வித்தியாசத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. “சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்” (12:19). அடுத்த பழமொழியே நமக்குச் சொல்கிறது, “தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்” (வ.20).
தேவனின் கட்டளைகள் முதல் பாலிவுட் நடிகர்கள் பற்றிய காணொளிகள் வரை, அனைத்திற்கும் நேர்மை பொருந்தும். சத்தியம் “என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்”
நீங்கள் பார்ப்பது, கேட்பது மற்றும் அனுபவிப்பது போன்றவற்றை எவ்வாறு ஞானமாகக் கேள்வி கேட்கலாம்? சத்தியத்தின் மீதான உங்கள் உறுதிப்பாட்டில் நீங்கள் எவ்வாறு வாழ்ந்து நிலைத்திருப்பீர்கள்?
அன்பு தேவனே, நான் தினமும் உண்மையானதைப் பின்தொடர்ந்திடத் தயவாய் எனக்குப் பகுத்தறிவைத் தாரும்.