2007  டீ20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், ஜோகன்னஸ்பர்க் மைதானத்திலிருந்த சுமார் 1,00,000 பேர் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். மிஸ்பா முதலில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் சிக்ஸர் விளாசினார். இருப்பினும், ஜோகிந்தர் ஷர்மா இன்னும் அமைதியாக அடுத்த பந்து வீசினார். இந்த முறை பந்தை ஒரு ஜோடி இந்திய கைகள் கவ்வின, ஒரு விக்கெட் விழுந்தது. மிஸ்பா ஆட்டமிழந்தார், அரங்கம் ஆர்ப்பாட்டத்தில் வெடித்தது, இந்தியா தனது முதல் டீ20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதுபோன்ற உணா்ச்சிமிக்க தருணங்களில்தான் சங்கீதம் 23:1 போன்ற வேதாகம வசனங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்” என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். நமக்குப் பெலனும் உறுதிப்பாடும் தேவைப்படும்போது, தேவனை ​​ஒரு மேய்ப்பனாக உருவகப்படுத்துகையில், ஆழ்ந்த தனிப்பட்ட முறையில் அவற்றைப் பெறலாம்.

சங்கீதம் 23 ஒரு பிரியமான சங்கீதம், ஏனென்றால் நம்மை அயராமல்  பராமரிக்கும் அன்பான மற்றும் நம்பகமான மேய்ப்பன் இருப்பதால், நாம் ஆறுதலையும் அல்லது சமாதானத்தையும் பெறலாம் என்று இது நமக்கு உறுதியளிக்கிறது. தீவிரமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் உண்டாகும் அச்சம் மற்றும் தேவன் வழங்கும் ஆறுதல் ஆகிய இரண்டிற்கும் தாவீது சாட்சியமளித்தார் (வ. 4). “தேற்றும்” என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை உறுதியைக் குறிக்கிறது, அல்லது அவரது வழிநடத்தும் பிரசன்னத்தால் உண்டாகும் தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது.

சவாலான சூழ்நிலைகளில், விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில், நல்ல மேய்ப்பன் நம்முடன் நடப்பார் என்ற இதமான நினைவூட்டலைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி நாம் தைரியம் பெறலாம்.