ஜூலியும் லிஸும் கலிபோர்னியா கடற்கரையில் சிறிய படகில், கூம்பு திமிங்கிலங்களைத் தேடிச் சென்றனர். இவை மேற்பரப்புக்கு அருகில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதாக அறியப்படுகின்றன, எனவே அவற்றை அங்கே காண்பது எளிது. அந்த இரண்டு பெண்களின் படகுக்கு அடியிலே நேரடியாக ஒன்று தென்பட்டபோது, அது அவர்கள் வாழ்வில் மறக்கமுடியா ஆச்சரியமாக இருந்து. ஒரு பார்வையாளர் அவர்கள் எதிர்கொண்ட  அந்த காட்சிகளைப் படம்பிடித்தார். அது, திமிங்கிலத்தின் பெரிய வாய் முன்பு, பெண்களையும் அவர்களின் சிறு படகுகளையும் சித்திரக் குள்ளர்களைப் போலத் தோன்றச் செய்ததைக் காட்டுகிறது. சிறிது நேரம் நீருக்கடியில் சென்ற பிறகு, பெண்கள் காயமின்றி தப்பினர்.

தீர்க்கதரிசி யோனாவை “பெரிய மீன்” (யோனா 1:17) விழுங்கியது குறித்த வேதாகம சம்பவம் பற்றிய கண்ணோட்டத்தை அவர்களின் அனுபவம் வழங்குகிறது. நினிவே மக்களுக்குப் பிரசங்கிக்கும்படி தேவன் அவருக்கு கட்டளையிட்டாா், ஆனால் அவர்கள் தேவனை நிராகரித்ததால், அவர்கள் அவருடைய மன்னிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்று யோனாவுக்கு தோன்றியது. கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவர் ஓடிப்போய் வேறுஒரு கப்பலில் ஏறினார். தேவன் ஒரு ஆபத்தான புயலை அனுப்பினார், அதனால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார்.

யோனாவை கொந்தளிக்கும் கடலில் தவிர்க்கமுடியா மரணத்திலிருந்து காப்பாற்றத் தேவன் ஒரு வழியை உண்டாக்கினார், அவருடைய செயல்களின் மிக மோசமான விளைவுகளிலிருந்து அவரைக் காத்தார். யோனா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்,  மற்றும் தேவன் உத்தரவு அருளினார் (2:2). யோனா தனது தவற்றை ஒப்புக்கொண்டு, தேவனின் நற்குணத்தைப் புகழ்ந்து அங்கீகரித்த பிறகு, தேவனுடைய கட்டளையின்படி, மீனிலிருந்து “கரையிலே” கக்கப்பட்டார் (வ. 10).

தேவனின் கிருபையால், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, இயேசுவின் மரணத்தில் நம் விசுவாசத்தை வைக்கும்போது, ​​நாம் சந்திக்கவேண்டிய ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுபட்டு, அவர் மூலம் புதிய வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.