பல ஆண்டுகளாக, ‘ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா’ என்ற பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வறட்சி பயிர்களை நாசமாக்கியது, கால்நடைகளைக் கொன்றது மற்றும் அது இலட்சக் கணக்கானவர்களைப் பாதிக்கிறது. கென்யாவின் கஹுமா அகதிகள் முகாமில் உள்ள ஜனங்கள் போர்கள் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பியவர்களைக் காட்டிலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு இளம் தாய் தன் குழந்தையை முகாம் அதிகாரிகளிடம் கொண்டு வந்ததை சமீபத்திய அறிக்கை விவரித்தது. குழந்தை கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு, “அவளுடைய முடி மற்றும் சருமம், உலர்ந்தும் உடைந்துமிருந்தது”, அவள் சிரிக்க மாட்டாள், சாப்பிட மாட்டாள். அவளது சின்னஞ்சிறு உடல் செத்துக்கொண்டிருந்தது. நிபுணர்கள் உடனடியாக செயல்பட்டனர். தேவைகள் இன்னும் பல இருந்தாலும்; அதிர்ஷ்டவசமாக, உடனடி பிறப்பு மற்றும் இறப்பு தேவைகளைச் சந்திக்க ஒரு உள்கட்டமைப்பு கட்டப்பட்டது.
இதுபோன்ற நம்பிக்கையற்ற பகுதிகள்தான் தேவஜனங்கள் அவருடைய ஒளியையும் அன்பையும் பிரகாசிக்க அழைக்கப்பட்ட இடங்களாகும் (ஏசாயா 58:8). ஜனங்கள் பட்டினியால் வாடும்போது, நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, தேவன் தம் ஜனங்களே முதலாவதாக உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு என்று அனைத்தையும் இயேசுவின் நாமத்தால் வழங்கும்படி அழைக்கிறார். பண்டைய இஸ்ரவேர்கள் உபவாசத்திலும் ஜெபத்திலும் உண்மையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும்” (வ.7) போன்ற இரக்கமுள்ள பணிகளைப் புறக்கணித்ததால் ஏசாயா அவர்களைக் கண்டித்தார்.
பசியுள்ளவர்களுக்குச் சரீர மற்றும் ஆவிக்குரிய ரீதியாக உணவளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் தேவையைப் பூர்த்தி செய்திட அவர் நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படுகிறார்.
உங்களைச் சுற்றி எவ்வகையான பசியைக் காண்கிறீர்கள்? உதவிடும்படி தேவன் உங்களை எங்கே அழைக்கிறார்?
அன்பு தேவனே, பசி மற்றும் துயரத்தில் இருப்பவர்களுக்கு உணவு, அன்பு மற்றும் ஆறுதல் ஆகியவற்றை நீர் எவ்வாறு அளிக்கிறீர் என்பதில் நானும் ஒரு பங்காற்ற உதவும்.