1921 ஆம் ஆண்டில், கலைஞர் சாம் ரோடியா தனது வாட்ஸ் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்கினார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் பதினேழு சிற்பங்கள் முப்பது மீட்டர் உயரம் எழுப்பப்பட்டன. இசைக்கலைஞர் ஜெர்ரி கார்சியா ரோடியாவின் தலைசிறந்த படைப்பை  நிராகரித்தார். “”நீங்கள் மரித்த பிறகும் இருக்கும் விஷயம் இது. அதுதான் இதன் பலன்” என்றார் கார்சியா. பிறகு, “ஆனால் இது எனக்கானதல்ல” என்றார்.

அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன? அவரது இசைக்குழு உறுப்பினர் பாப் வீா், இவ்விருவரின் கருத்தைச் சுருக்கமாகக் கூறினார்: “நித்தியத்தில், உங்களைப் பற்றி எதுவும் நினைவில் கொள்ளப்படாது. எனவே ஏன் வேடிக்கைகாக இருக்கக்கூடாது?”

ஒரு ஐசுவரியமான ஞானி  ஒருமுறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து “அதற்கான பலனை” கண்டுகொள்ள முயன்றான். அவர் , “வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்” (பிரசங்கி 2:1) என்று எழுதினார். ஆனால் அவர், ” மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை” (வச. 16) என்றும் குறிப்பிட்டார். அவர், “சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது” (வ. 17) என்று முடித்தார்.

இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும், அத்தகைய குறுகிய மனப்பான்மையான வாழ்க்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இயேசு நமக்கு “பரிபூரண ஜீவனை ” கொடுக்க வந்தார் (யோவான் 10:10) மேலும் இந்த வாழ்க்கையை நித்தியத்தின் கண்ணோட்டத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார். “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்.. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” (மத்தேயு 6:19-20) என்று அவர் கூறினார். பின்னர் அவர் அதைச் சுருக்கமாக: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (வ. 33) என்றார்.

அதுதான் சூரியனுக்குக் கீழும், அதற்கு அப்பாலும் நீடிக்கும் பலன் .