கைல் ஸ்பெல்லர், சாம்பியன்ஷிப் கூடைப்பந்தாட்டப் போட்டிகளின் போது, உற்சாகமாக அறிவிப்பு கொடுக்கும் தனது பிரேத்யேகமான அறிவிப்பு மொழிநடைக்கு மிகவும் பிரபலமானவர். “ஆரம்பிக்கலாம்!” அவர் மைக்கில் இடி முழக்கினார், ஆயிரக்கணக்கான ரசிகர்களும், அந்த செயலைப் பார்க்கும் அல்லது கேட்கும் லட்சக்கணக்கான மக்களும், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வர்ணனையாளர் விருதுக்கான பரிந்துரையைக் கைலைப் பெற்ற குரலுக்கு இசைகின்றனர். “கூட்டத்தினரையும், வீரர்களையும் எவ்வாறு உற்சாகப்படுத்துவது என்பது எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அவரது குரல் கலைத்திறனின் ஒவ்வொரு வார்த்தையும் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில் இடம்பெற்றது தேவனை மகிமைப்படுத்துவதாகும் என்கிறார். கைல் மேலும், “ஒரே பார்வையாளர்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று தனது பணி குறித்துச் சொல்கிறார்.
கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் இறையாண்மை குறித்த சந்தேகங்களை தங்களது நடைமுறை வாழ்க்கையிலும் கூட ஊடுருவ அனுமதித்த கொலோசெய சபையினருக்கு இதே போன்ற நெறிமுறைகளை அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்தினார். அதற்கு உத்தரவாக, பவுல் எழுதினார், “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோசெயர் 3:17).
பவுல் மேலும் கூறினார், “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (வச. 24). கைல் ஸ்பெல்லரைப் பொறுத்தவரை, அதில் அவரது சிற்றாலய போதகர் என்ற பணியும் அடங்கும். அதைக் குறித்து, “பூமியில் எனது நோக்கம் இதுவே; மேலும் அறிவிப்பு கலை அதில் ஒரு சிறந்த பகுதியே” என்கிறார். தேவனுக்கான நமது சொந்த வேலை, நமது ஒரே பார்வையாளருக்கு இனிமையாக இருக்கும்.
உங்கள் பணி நெறிமுறையின் முக்கிய காரணி என்ன? தேவனுக்காக வேலை செய்வது எவ்வாறு உங்கள் கண்ணோட்டத்தை மாற்றும்?
இயேசுவே, எனது பணிக்காக உமக்கு நன்றி. உமக்காக அனைத்தையும் செய்ய என்னை ஊக்குவியும்.