அது ஜூன் 2016, ராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவளது வண்டியிலிருந்து, ராணி கூட்டத்தை நோக்கி கை அசைத்து, சிவப்பு நிற சீருடையணிந்த வீரர்களின் மிகசீரான நீண்ட வரிசைகளுக்கு முன்னால் கடந்து சென்றாா்கள். இங்கிலாந்தில் அது உஷ்ணமான நாள், மேலும் காவலர்கள் தங்கள் பாரம்பரிய அடர் கம்பளி கால்சட்டை, தாடை வரை பொத்தான்கள் போடப்பட்ட கம்பளி மேலாடைகள் மற்றும் பாரிய கரடி-உரோம தொப்பிகளை அணிந்திருந்தனர். வீரர்கள் சூரியனுக்குக் கீழே கடுமையான வரிசைகளில் நின்றபோது, ஒரு காவலர் மயக்கமடையத் தொடங்கினார். வியத்தகு வகையில், அவர் தன்னை கடுமையாகிக் கட்டுப்படுத்தி, வெறுமனே முன்னோக்கி விழுந்தார், மணல் சரளையில் அவரது முகம் புதைந்தபோது அவரது உடல் ஒரு பலகை போன்று நேராக இருந்தது. அங்கே அவர் அப்படியே கிடந்தார், விறைப்பாகவே விழுந்து கிடந்தார்.
இந்த காவலர் சுயகட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கும், அவர் மயங்கி விழுந்தபோதும் தனது உடலைச் சரியான இடத்தில் வைத்திருப்பதற்கும் பல வருடப் பயிற்சியும் ஒழுக்கமும் தேவைப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிப்பட்ட பயிற்சியை விவரிக்கிறார்: “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரிந்தியர் 9:27 ) என்று அவர் எழுதினார். “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” (வ. 25) என்று அவர் கண்டுணர்கிறார்.
தேவனின் கிருபையே (நம் சுய முயற்சிகள் அல்ல) நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் வலுவூட்டும் ஆதாரமாக இருந்தாலும், நமது ஆவிக்குரிய வாழ்க்கை கடுமையான ஒழுக்கத்திற்குப் பாத்திரமானது. நம் மனதையும், இருதயத்தையும், உடலையும் ஒழுங்குபடுத்தத் தேவன் நமக்கு உதவுவதால், சோதனைகள் அல்லது கவனச்சிதறல்களுக்கு மத்தியிலும் கூட, நம் கவனத்தை அவர் மீது வைக்கக் கற்றுக்கொள்கிறோம்.
உங்கள் இதயம், மனம் அல்லது உடலை ஒழுங்குபடுத்துவது உங்களுக்கு எப்போது மிகவும் கடினமாக உள்ளது? தேவன் உங்களை ஆழமான ஒழுக்கத்திற்கு அழைப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
அன்பு தேவனே, உமக்காக மேலும் ஒழுக்கத்துடன் இருப்பது எப்படி என்று எனக்குப் போதியும். நான் உமக்கான அன்பை வளர்க்கவும், என் இதயத்தை உம்மிடம் நெருக்கமாக வைத்துக்கொள்ளவும் விரும்புகிறேன்.