என் அம்மா சிகிச்சையிலிருந்தபோது, ​​பூமியில் அவளுடைய கடைசி நாட்களை நெருங்கியபோது, ​​ஒரு முதியோர் இல்ல பராமரிப்பாளரின் உண்மையான கருணை என்னை அசைத்தது. நலிவடைந்த என் அம்மாவை அவளது நாற்காலியிலிருந்து மெதுவாகத் தூக்கி கட்டிலில் அமர்த்திய பிறகு, செவிலிய உதவியாளர் அம்மாவின் தலையைக் கோதி மெதுவாக அவள்மேல்  சாய்ந்து கொண்டு, “நீங்கள் மிகவும் இனிமையானவர்” என்று கூறினார். பிறகு நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டாள். அவளுடைய கருணை என்னை அன்றும் இன்றும் கண்ணீரை வரவழைத்தது.

அவளது ஒரு எளிய கருணை செயல், ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அது தேவைப்பட்டது. இந்த பெண்ணின் பார்வையில் என் அம்மா ஒரு நோயாளி மட்டும் அல்ல என்பதை அறிந்து அவளோடு ஒத்துழைக்க எனக்கு உதவியது. அவள் அவளை மிகவும் மதிப்புமிக்க நபராகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

நகோமியும் ரூத்தும் தங்கள் கணவர்களை இழந்த பிறகு, போவாஸ் ரூத்துக்கு இரக்கம் காட்டினார், அறுவடை செய்பவர்களுக்குப் பின்னால் எஞ்சிய தானியங்களைச் சேகரிக்க அனுமதித்தார். அறுவடை செய்யும் ஆண்களுக்கு அவளைத் தனியாக விட்டுவிடுமாறு கட்டளையிட்டார் (ரூத் 2:8-9). நகோமியின் மீதான ரூத்தின் அக்கறையினால் அவனது கருணை உந்தப்பட்டது: “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும்.. எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” (வ. 11). அவர் அவளை ஒரு அந்நியராகவோ அல்லது விதவையாகவோ பார்க்கவில்லை, ஆனால் ஒரு தேவையிலுள்ள பெண்ணாகவே பார்த்தார்.

நாம், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” (கொலோசெயர் 3:12) வாழத் தேவன் விரும்புகிறார் . தேவன் நமக்கு உதவுவதால், நம்முடைய எளிய தயவான செயல்களால் உள்ளங்களை உற்சாகப்படுத்தவும், நம்பிக்கையூட்டவும், பிறரிடம் கருணையைப் பிறப்பிக்கவும் முடியும்.