இந்த பழமொழியை சில மாற்றங்களோடு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம்: “நீங்கள் வேகமாகச் செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்” இது ஒரு அழகான சிந்தனை, இல்லையா? ஆனால் இந்த வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல, உண்மையும் கூட என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் திடமான ஆராய்ச்சி உள்ளதா?

ஆம்! உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய ஒரு ஆய்வு, மக்கள் தனியாகச் செல்வதைக் காட்டிலும்  வேறு ஒருவருடன் செல்லும்போதும் மலைகளின் தூர அளவு கணிசமாகக் குறைவதாக தெரிவதை அது நிரூபித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “சமுதாய ஆதரவு” முக்கியமானது; அது மலைகளின் அளவைக் கூட நம் மனதில் சுருங்கச் செய்கிறது.

யோனத்தானுடனான நட்பில் அந்த வகையான ஊக்கம் அழகானதாகவும் உண்மையாகவும் இருப்பதை தாவீது கண்டார். தாவீதின் கதையில் சவுல் ராஜாவின் பொறாமையான கோபம் தனது உயிரை வாங்கக்கூடிய அளவு  கடக்க முடியாத மலை போல் இருந்தது (பார்க்க 1 சாமுவேல் 19:9-18). எந்தவொரு ஆதரவுமின்றி, இந்த விஷயத்தில் அவரது நெருங்கிய தோழனின்றி, கதை முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் யோனத்தான், “தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது” (20:34), தனது நண்பருக்கு ஆதரவாக நின்றார். “அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்?” என்று கேட்டார் (வ. 32). தேவன் நியமித்த அவர்களுடைய நட்பு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்க அனுமதித்தது.

நமது நட்பு முக்கியமானது. தேவன் நமது மையத்தில் இருக்கும்போது, ​​நாம் கற்பனை செய்வதை விடப் பெரிய காரியங்களைச் செய்ய ஒருவரையொருவர் ஊக்குவிக்லாம்.