எனது காலை நடைப்பயிற்சியின் போது, தவறான திசையில் ஒரு வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டதைக் கவனித்தேன். ஓட்டுநர் தூங்கியதாலும், மது போதையிலிருந்ததாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் ஆபத்து குறித்து அறியவில்லை. நிலைமை ஆபத்தானது, நான் செயல்பட வேண்டியிருந்தது. அவளை விழிப்பூட்டி வாகனத்தின் பயணிகள் பக்கத்திற்கு நகர்த்திய பிறகு, நான் ஓட்டுநர் இருக்கையில் ஏறினேன், நான் அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு ஒட்டி சென்றேன்
உடல் சார்ந்த ஆபத்து மட்டுமே நாம் எதிர்கொள்ளும் தீங்கு அல்ல. அத்தேனேவில் உலக ஞானமும் புத்திசாலித்தனமும் நிரைந்த ஜனங்கள் ஆவிக்குரிய ஆபத்தில் இருப்பதை பவுல் பார்த்தார், காரணம் ”பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது” அவர் “தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தார்” (அப்போஸ்தலர் 17:16). கிறிஸ்துவைக் கருத்தில் கொள்ளாமல் தவறான கருத்துக்களுடன் சுற்றித்திரிபர்களுக்கு அப்போஸ்தலனின் உள்ளார்ந்த பதில், இயேசுவின் மூலமாகவும் இயேசுவுக்குள்ளாகவும் தேவனுடைய நோக்கங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதாகும் (வ.18, 30-31). கேட்ட சிலர் நம்பினர் (வ.34).
கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையைத் தவிர்த்து வாழ்வின் மெய்யான அர்த்தத்தைத் தேடுவது ஆபத்தானது. இயேசுவில் மன்னிப்பையும் மெய்யான நிறைவையும் கண்டவர்கள், மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டு ஒப்புரவாகுதலின் செய்தியைப் பெற்றுள்ளனர் (பார்க்க 2 கொரிந்தியர் 5:18-21). இந்த உலக வாழ்க்கையின் மயக்கத்தில் இருப்பவர்களுடன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது, தீங்கிழைக்கும் வழியிலிருந்து ஜனங்களைத் தட்டிப்பறிக்கத் தேவன் இன்னும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.
நீங்கள் இயேசுவிடம் செல்லவில்லை என்றால், நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் பகிரவேண்டி இருந்தால், ஆவிக்குரிய தீங்கிலிருந்து தேவன் உங்களை எப்படிக் காப்பாற்றினார் என்று ஒருவரிடம் சொல்லமுடியாமல் உங்களைத் தடுப்பது எது?
பரலோகத் தகப்பனே, என் சொந்த பாவத்தின் ஆவிக்குரிய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி. தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர முடியாத பிறருக்கு உதவ என்னைப் பயன்படுத்தும்.