நானும் என் மனைவியும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மைல்கள் மிதிவண்டியில், எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகளில் ஒட்டுகிறோம். இந்த அனுபவத்தை மேம்படுத்த, எங்கள் மிதிவண்டிகளுடன் சில பாகங்களை இணைத்துள்ளோம். ஜெனிபரின் மிதிவண்டியில் ஒரு முன் விளக்கு, ஒரு பின் விளக்கு, ஒரு ஓட்ட அளவி மற்றும் ஒரு சிறிய பூட்டு ஆகியவை உள்ளன. என்னுடையதில் தண்ணீர் புட்டி வைக்கும் பகுதியுண்டு. உண்மையில், இத்தகைய உதிரி இணைப்பு பாகங்களின்றி ஒவ்வொரு நாளும் எங்கள் பாதையில் வெற்றிகரமாகச் சவாரி செய்து, போதுமான தூரத்தை எளிதாகக் கடக்க முடியும். இவைகள் உதவிகரமானவை ஆனால் அவசியமானவையல்ல.
எபேசியர் புத்தகத்தில், அப்போஸ்தலன் பவுல் மற்றுமொரு துணை பாகங்களைப் பற்றி எழுதுகிறார்; ஆனால் இவை அத்தியாவசியமானவை. இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெற்றிகரமாக வாழ்ந்திட, இவற்றை “தரித்துக்கொள்ளுங்கள்” என்றார். நம் வாழ்க்கை எளிதான பயணங்கள் அல்ல. நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம், அதில் நாம் “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க” (6:11) வேண்டும், எனவே நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும்.
வேத ஞானம் இன்றி, நாம் தவறானதை ஏற்றுக்கொள்ள நடத்தப்படலாம். இயேசு தமது “சத்தியத்தின்படி” வாழ்ந்திட நமக்கு உதவாவிடில், நாம் பொய்களுக்கு அடிபணிவோம் (வ.14). “சுவிசேஷம்” இன்றி நமக்கு “சமாதானம்” இல்லை (வ.15). “விசுவாசம்” நம்மைக் காக்காவிடில், நாம் சந்தேகத்திற்கு ஆளாவோம் (வ.16). நமது “இரட்சிப்பு” மற்றும் பரிசுத்த ஆவியானவர், தேவனுக்காக நன்றாய் வாழும்படி நம்மை நங்கூரமிடுகிறாா் (வ.17). இதுவே நமது கவசம்.
வாழ்க்கையின் உண்மையான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் பாதையில் நாம் பயணிப்பது எவ்வளவு அவசியம். பாதையில் எதிரிடும் சவால்களுக்குக் கிறிஸ்து நம்மை ஆயத்தப்படுத்தும்போது; தேவன் அளிக்கும் சர்வாயுதவர்க்கத்தை நாம் “தரித்துக்கொள்ளுகையில்” நாம் அதனை நிறைவேற்றுகிறோம்.
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நீங்கள் "தரித்துக்கொள்வதன்" பொருள் என்ன? அவருடைய சர்வாயுதவர்க்கம் மிகவும் அவசியப்படும் எத்தகைய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?
அன்பு தகப்பனே, சாத்தானின் தாக்குதல்களுக்கு எதிராக நான் எவ்வாறு நிற்க முடியும் என்பதை வேதத்தில் எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி.