சோபியா ராபர்ட்ஸ் தனது பதினொரு வயதில் முதன்முறையாக திறந்த இதய அறுவை சிகிச்சையை அனுபவித்தாள். அத்தகைய மருத்துவ முறையைப் பார்க்க ஒரு குழந்தைக்கு இது சற்று இளமையாகத் தோன்றினாலும், அவளுடைய அப்பா டாக்டர். ஹெரால்ட் ராபர்ட்ஸ் ஜூனியர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில், முப்பது வயதான சோபியா, தற்போது அறுவை சிகிச்சை மருத்துவராய் தனது தந்தையுடன் இணைந்து வெற்றிகரமான பெருநாடி வால்வு மாற்ற அறுவை சிகிச்சையை வெற்றியாகச் செய்தார். ஹரோல்ட் கூறும்போது, “வேறென்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? நான் இந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்… இப்போது, ஒரு மனித இதயத்தை எவ்வாறு கையாளுவது என்பதை கற்றுக்கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யமாயிருக்கிறது” என்று சொல்லுகிறார். 

நம்மில் சிலர் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை திறன்களைக் கற்பிக்கலாம். சாலெமோன் அடுத்த தலைமுறைக்கு தேவனையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்த கற்றுக்கொடுக்கிறார். ஞானமுள்ள ராஜா, தேவனுடனான தனது உறவில் கற்றுக்கொண்டதை தன் குழந்தையுடன் உணர்ச்சிபொங்க பகிர்ந்துகொள்கிறார்: “என் மகனே… உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது” (நீதிமொழிகள் 3:1,5), “கர்த்தருக்கு பயப்படுங்கள்” (வச. 7), “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” (வச. 11). அவருடைய சிட்சையையும் வழிகாட்டுதலையும் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளும் தம்முடைய பிள்ளைகளில் தேவன் “அன்பு செய்கிறார்” மற்றும் “மகிழ்ச்சியடைகிறார்” என்பதை சாலெமோன் அறிந்திருந்தார் (வச. 12).

நம் அற்புதமான, ஆச்சரியமான தேவனை நம்புவது, மதித்தல், மரியாதை செய்வது மற்றும் தாழ்மையுடன் செயல்படுவதின் அர்த்தம் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம். அப்படிச் செய்வதில் அவருடன் கூட்டு சேர்வது மனதைக் கவரும் ஒரு சிலாக்கியம்!