“நீங்கள் இந்த இடத்திற்கு உரியவர் இல்லை.” அந்த வார்த்தைகள் ஒரு எட்டு வயது சிறுமியின் இதயத்தை நசுக்கியது, தொடர்ந்து வேதனைப்பட்டாள். அவரது குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து புதிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளது. மேலும் அவரது குடியேற்ற அட்டையில் அந்நியர் என்ற வார்த்தை முத்திரையிடப்பட்டிருந்தது. அவள் அந்த நாட்டிற்கு சொந்தமானவள் இல்லை என்று உணர்ந்தாள்.
வயது முதிர்ந்தவளானாலும், இயேசுவை விசுவாசித்தாலும் அவள் தன்னை ஒரு விரும்படாத அந்நியனாகவே உணர்ந்தாள். அவளுடைய வேதாகமத்தைப் படிக்கும்போது, எபேசியர் 2-ன் வாக்குறுதிகளை அவள் கண்டுபிடித்தாள். 12ஆம் வசனத்தில் அந்நியர் என்ற அந்த கடினமான வார்த்தையை அவள் கண்டுபிடித்தாள்: “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.” ஆனால் அவள் தொடர்ந்து வாசிக்கையில், கிறிஸ்துவின் தியாகம் தன் நிலையை எப்படி மாற்றியது என்பதைப் பார்த்தாள். அவள் வசனம் 19 ஐப் படித்தாள். “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,” என்பதை வாசித்து, தேவ ஜனத்துடன் அவள் ஒரு குடிமகளாய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். தான் பரலோகத்தின் பிரஜை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். இனி ஒருபோதும் அவள் வெளிநாட்டினராக இருக்க மாட்டாள். தேவன் அவளை ஏற்றுக்கொண்டார்.
நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் தேவனுக்கு அந்நியராயிருக்கிறோம். ஆனால் நாம் அப்படியே இருக்க வேண்டியதில்லை. இயேசு “தூரமாயிருந்த” இருந்த அனைவருக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தார் (வச. 17), தம்மை நம்புகிற அனைவரையும் தம்முடைய நித்திய ராஜ்யத்தின் சக குடிமக்களாக மாற்றி, கிறிஸ்துவின் சரீரமாக ஐக்கியப்படுத்தினார்.
நீங்கள் எந்த வகையில் அந்நியமாக உணர்கிறீர்கள்? தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் தம்மில் ஐக்கியப்படுத்த அழைத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிவதன் அர்த்தம் என்ன?
அன்புள்ள பரலோகத் தகப்பனே, உம்முடனும், உம்மை நேசிக்கும் மற்றவர்களுடனும் நான் ஐக்கியத்தை அனுபவிக்க அனுமதித்ததற்கு நன்றி.