உலகளாவிய பார்வையாளர்கள் பில்லியன்களில் மதிப்பிடப்பட்ட நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட ஒளிபரப்பாக இருக்கலாம். அன்று ஒரு மில்லியன் மக்கள் லண்டனின் தெருக்களில் வரிசையாக நின்றனர், மேலும் 250,000 பேர் அந்த வாரத்தில் ராணியின் சவப்பெட்டியைப் பார்க்க மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஐந்நூறு மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள் மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் ஒரு வலிமை மற்றும் பண்புக்காக அறியப்பட்ட ஒரு பெண்ணுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
உலகம் தனது பார்வையை கிரேட் பிரிட்டன் மற்றும் அதன் ராணியின் பக்கம் திரும்பியபோது, என் எண்ணங்கள் வேறொரு நிகழ்வை நோக்கி திரும்பியது – ஒரு ராஜ வருகை. ஒரு நாள் வரப்போகிறது; அப்பொழுது தேசங்கள் ஒன்று கூடி ஒரு மிகப் பெரிய ராஜாவை அங்கீகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 45:20-22). வலிமையும் பண்பும் கொண்ட ஒரு தலைவர் (வச. 24). அவருக்கு முன்பாக “முழங்கால் யாவும்… முடங்கும், நாவு யாவும் (அவரை) முன்னிட்டு ஆணையிடும்” (வச. 23). உலகத் தலைவர்கள் உட்பட, அவருக்குக் காணிக்கை செலுத்தி தங்கள் நாடுகளை அவருடைய வெளிச்சத்தில் நடக்கவைப்பார்கள் (வெளிப்படுத்துதல் 21:24,26). இந்த ராஜாவின் வருகையை அனைவரும் வரவேற்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறவர்கள் அவருடைய ஆளுகையை என்றென்றும் அனுபவிப்பார்கள் (ஏசாயா 45:24-25).
ஒரு ராணி வெளியேறுவதைப் பார்க்க உலகம் கூடியது போல், ஒரு நாள் அதன் இறுதி ராஜா திரும்பி வருவதைக் காணும். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை வணங்கி அவரை ஆண்டவராக அங்கீகரிக்கும் அந்த நாள் எப்பேற்பட்ட நாளாய் இருக்கப் போகிறது! (பிலிப்பியர் 2:10-11).
விரைவில் வரவிருக்கும் இந்த ராஜாவின் வருகையைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? இன்று ராஜாவாக இயேசுவைப் பின்பற்றுவது எப்படி இருக்க வேண்டும்?
அன்புள்ள இயேசுவே, நான் இன்று உங்களை வணங்குகிறேன், உலகின் இறுதி ராஜாவாகவும், என் வாழ்க்கையின் சரியான ஆட்சியாளராகவும் உம்மை கனப்படுத்துகிறேன்.