தொற்றுநோய் ஜெயமெடுத்துக்கொண்டிருந்தது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற உறுதிபூண்டுள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர அறை மருத்துவருக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் எப்படி சிறந்ததை கொடுக்க முடியும்? அந்த சிரமத்தின் மத்தியில், பனிக்குமிழிகள் புகைப்படத்தை பெரிதாக்கி தன் மகிழ்ச்சியை தேடிக்கொண்டார். இது முட்டாள்தனமாய் தெரிகிறது என்று அந்த மருத்துவர் கூறுகிறார். ஆனால் சிறிய ஆனால் அழகான ஒன்றில் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்பது, “என்னுடைய சிருஷ்டிகரோடு பிணைக்கப்படுவதற்கும், ஒரு சிலரால் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் இந்த உலகத்தை பிரம்மாண்டமாய் பார்க்க நம்மை தூண்டுகிறது” என்று அந்த மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இந்த வழிகளில் மகிழ்ச்சியை தேடுவது என்பது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நெகிழ்ச்சியை வளர்ப்பதற்கும் இந்த மருத்துவத் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மருத்துவர் கூறுகிறார். அவர் “அனைவரும் மூச்சிவிடுவது அவசியம்; அதற்கு நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்” என்று எல்லோருக்கும் ஆலோசனை கொடுக்கிறார்.
சங்கீதக்காரன் தாவீது இந்த எண்ணத்தை சங்கீதம் 16 இல் வெளிப்படுத்துகிறார். “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்” என்றும் “ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” (வச. 5,9) என்று குறிப்பிடுகிறார்.
தங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு இன்று மக்கள் பல வழிகளை கையாளுகின்றனர். ஆனால் இந்த மருத்துவரோ தன்னை சிருஷ்டிகருக்கு நேராய் திசை திருப்பும் ஞானமான மகிழ்ச்சியின் பாதையை கண்டுபிடித்தார். “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு” (வச. 11). அவரில் நாம் நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிக்கிறோம்.
ஞானமான மகிழ்ச்சியைக் கண்டறிவது உங்கள் வாழ்க்கையை எவ்விதத்தில் ஆசீர்வதிக்கிறது? நீங்கள் சங்கீதம் 16-ஐ வாசிக்கும்போது, தேவனில் நீங்கள் மகிழ்ச்சியைக் காணும் வழிகளுக்கு அது எவ்வாறு உங்களைத் தூண்டுகிறது?
தேவனே, என் வாழ்க்கைப் பயணத்தில் உம்மில் துவங்கும் மகிழ்ச்சியை ஞானமாக கண்டுபிடிக்க என்னை ஆசீர்வதியும்.