நாட்டுப்புற இசைஞானியான ஜானி கேஷ் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோதும், தொடர்ந்து இசையமைப்பதில் உறுதியாக இருந்தார். அவரது இறுதி ஆல்பம், “அமெரிக்கன் 6: ஐன்ட் நோ கிரேவ்,” அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்டது. காஷின் ஒரு பாடலின் தலைப்புப் பாடலானது, அவர் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையைப் பாடுவதைக் கேட்கும்போது அவரது இறுதி எண்ணங்களைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறது. அவரது புகழ்பெற்ற ஆழமான குரல், அவரது உடல்நலக் குறைவால் பலவீனமடைந்தாலும், விசுவாசத்தின் சக்திவாய்ந்த சாட்சியை அறிவிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு காலையில், ஜானியின் நம்பிக்கையானது வெறும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதில் மட்டுமில்லாமல், தன்னுடைய சரீரமும் உயிர்த்தெழும் என்பதை அவர் நம்பியிருந்தார். 

இது ஒரு முக்கியமான சத்தியம், ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில் கூட, மக்கள் மரணத்திற்கு பின்னான உயிர்தெழுதல் என்னும் நம்பிக்கையை மறுதலித்தனர். பவுல் அவர்களின் வாதத்தை கடுமையாக விமர்சித்தார், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:13-14).

இயேசுவின் சரீரத்தை கல்லறையால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதுபோல், அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிற அனைவரும் ஒரு நாள் “உயிர்பிக்கப்படுவார்கள்” (வச. 22). மேலும் உயிர்த்தெழுந்த சரீரத்தோடு ஒரு புதிய பூமியில் அவருடன் நித்தியத்தை அனுபவித்து மகிழ்வோம். அதுவே நம்முடைய துதிகளுக்கான காரணம்!